வீடுகளில் மதுவகைகளை இருப்பு வைத்துக் கொள்ளும் அளவை தமிழக அரசு அதிகரித்துள்ளது. இதன்படி வீடுகளில் 12 மதுபாட்டில்களை இருப்பு வைத்துக்கொள்ளலாம், அதில் 6 பாட்டில்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வௌிநாட்டு மதுவகைகளாக(ஐ.எம்.எல்.எல்.) இருப்பு வைத்துக்கொள்ளலாம்.

அதாவது 12 பாட்டில்கள் வவை(650மி.மீ) வரை பீர் பாட்டில்களும், அதற்கு இணையாக ஒயின் பாட்டில்களும் இருப்பு வைக்கலாம்.

தமிழ்நாடு மது பயன்பாடு மற்றும் இருப்புச் சட்டத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தத்தின் அடிப்படையில் இது அமலுக்கு வந்துள்ளது.

இதற்கு முன் மக்கள் தங்கள் வீடுகளில் 750மி.மீ கொள்ளவு கொண்ட ஐ.எம்.எப்.எல். மது பாட்டில் ஒன்றும், வௌிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு மதுபாட்டிலும் இருப்பு வைத்துக்கொள்ளலாம். இது தவிர 2 பாட்டில்கள் பீர், மற்றும் ஒருபாட்டில் ஒயின் இருப்பு வைத்து தனிநபர் ஒருவர் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த புதிய திருத்தத்தின்படி, 12 பாட்டில்கள் வரை மது இருப்பு வைக்கலாம்.

இது குறித்து தலைமைச் செயலகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “ மது இருப்பு வைத்துக் கொள்ளும் அளவை அதிகரித்தது குறித்து தெரியும். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த சட்டத்தில் திருத்தம் செய்யப்படாமல் இருந்தது. மற்ற மாநிலங்களில் உள்ள நிலையை பார்த்து, இந்த திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது’’ என்றார்.

கர்நாடக மாநிலத்தில் ஒரு தனிநபர் ஒருவர் வீட்டில் 24 பாட்டில்கள் மது இருப்பு வைத்து  பயன்படுத்தலாம். அதில் விஸ்கி, ரம், ஜின், வோட்கா அடங்கும். 28 பாட்டில்கள் பீர் இருப்பு வைக்கலாம்.  இந்த அளவுக்கு அதிகமாக இருப்புவைக்கும் போதுமட்டுமே அரசின் நடவடிக்கைக்கு ஆளாவோம்.

அவ்வாறு அதிகமாக இருப்பு வைத்தால், ரூ.2 ஆயிரம் அபராதம்,  மற்றும் மது வகைகள், விலைக்கு ஏற்றார்போல் அபராதத்தின அளவு அதிகரிக்கும்.