Asianet News TamilAsianet News Tamil

அடுத்த அதிரடி... கறுப்பு பணம் பதுக்கிய இந்தியர்கள் யார்..? மத்திய அரசிடம் சுவிஸ் வங்கி இன்று பட்டியல் அளிப்பதாக தகவல்!

சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் விவரங்களை தரக்கோரி நீண்ட நாட்களாக மத்திய அரசு அந்நாட்டு அதிகாரிகளுடன் மத்திய அரசின் நேர்முக வரிகள் வாரிய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திவந்தனர். பல ஆண்டுகளாக நடந்த வந்த பேச்சுவார்த்தையின் அடிப்படையில் சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களி விவரங்களை அளிக்க சுவிட்சர்லாந்து அதிகாரிகள் முடிவு செய்தனர். 
 

Swiss bank gives list to centre government whoever deposit black money
Author
Delhi, First Published Sep 1, 2019, 9:08 AM IST

சுவிஸ் வங்கியில் கறுப்பு பணத்தைப் பதுக்கிய இந்தியர்களின் பட்டியல் மத்திய அரசுக்கு சுவிஸ் வங்கி இன்று அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. Swiss bank gives list to centre government whoever deposit black money
உலக அளவில் பிரபலமான சுவிஸ் வங்கியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் வங்கிக் கணக்கு வைத்திருக்கிறார்கள். அரசுக்குக் கணக்குக் காட்டாத பணத்தை வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு வைப்பதில் சுவிஸ் வங்கிகளே முன்னிலையில் இருந்துவருகின்றன. இந்தியாவைச் சேர்ந்த அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், வரி ஏய்ப்பு செய்வோர் ஆகியோர் சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்து பணத்து பதுக்கியுள்ளனர்.

 Swiss bank gives list to centre government whoever deposit black money
சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் விவரங்களை தரக்கோரி நீண்ட நாட்களாக மத்திய அரசு அந்நாட்டு அதிகாரிகளுடன் மத்திய அரசின் நேர்முக வரிகள் வாரிய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திவந்தனர். பல ஆண்டுகளாக நடந்த வந்த பேச்சுவார்த்தையின் அடிப்படையில் சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களி விவரங்களை அளிக்க சுவிட்சர்லாந்து அதிகாரிகள் முடிவு செய்தனர். Swiss bank gives list to centre government whoever deposit black money
சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களின் விவரங்கள் எப்போது கிடைக்கும் என்று மத்திய அரசு எதிர்பார்த்து காத்திருந்தது. இந்நிலையில் கறுப்பு பணத்தை பதுக்கிய இந்தியர்களின் விவரங்களை சுவிஸ் வங்கி இன்று அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 Swiss bank gives list to centre government whoever deposit black money
சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருந்தவர்கள் மட்டுமல்ல, ஏற்கனவே கணக்கை முடித்துக் கொண்டவர்களின் தகவலும் மத்திய அரசுக்கு கிடைக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  இதன் மூலம் சுவிஸ் வங்கியில் கறுப்பு பணத்தை பதுக்கியவர்கள் யார் என்பது தெரியவரும். அவர்கள் விரைவில் சிக்குவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios