Asianet News TamilAsianet News Tamil

பேச்சுவார்த்தைக்கு அசைவு கொடுத்த பிரதமர் மோடி... குரேஷியை சந்திக்கிறார் சுஷ்மா!

பாகிஸ்தான், இந்தியா இடையிலான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பிரதமர் மோடிக்கு விடுத்திருந்த கோரிக்கை ஏற்கப்பட்டது.

Sushma Swaraj will meet Pakistan Foreign Ministe
Author
Delhi, First Published Sep 21, 2018, 1:53 PM IST

பாகிஸ்தான், இந்தியா இடையிலான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பிரதமர் மோடிக்கு விடுத்திருந்த கோரிக்கை ஏற்கப்பட்டது. இதையடுத்து, நியூயார்க்கில் அடுத்த வாரம் நடைபெறும் ஐ.நா.சபைக் கூட்டத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜும், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் மக்தும் ஷா மஹ்முத் குரேஷியும் சந்தித்துப் பேசுகின்றனர்.

 Sushma Swaraj will meet Pakistan Foreign Ministe

பஞ்சாப் மாநிலம், பதான்கோட்டில், கடந்த 2016-ம் ஆண்டு பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர், இதில் பல இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு பின் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தையை இந்தியா முற்றிலும் நிறுத்தியது. அதே ஆண்டில் காஷ்மீரில் யூரியில் ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது, இதில் 18 வீரர்கள் கொல்லப்பட்டனர். இதைத்தொடர்ந்து  தீவிரவாதிகள் முகாம் மீது இந்திய ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினார்கள், இஸ்லாமாபாதில் நடக்க இருந்த சார்க் மாநாட்டையும் மத்திய அரசு புறக்கணித்தது. Sushma Swaraj will meet Pakistan Foreign Ministe

இந்நிலையில் பாகிஸ்தானின் புதிய பிரதமராக இம்ரான் கான் பதவிக்கு வந்தவுடன் இந்தியாவுடன் மீண்டும் அமைதிப்பேச்சை தொடங்குவதில் ஆர்வம் காட்டினார். இம்ரான் கானுக்கு வாழ்ததுத் தெரிவித்து பிரதமர் மோடி வாழ்த்துத் தெரிவித்தார். இதற்கு பதில் அளித்து இம்ரான் கான் மோடிக்கு கடிதம் எழுதினார். அதில்,  இந்தியா பாகிஸ்தானுக்கு சவாலாக இருக்கும் தீவிரவாதம், காஷ்மீர் பிரச்சினைக்கு த தீர்வு காண மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும். இம்மாதத்தில் நியூயார்க்கில் இந்தியா, பாகிஸ்தான் பங்கேற்கும் ஐநா சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. 

அந்த கூட்டத்தில் இரு நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பு நடத்த வேண்டும். இரு நாடுகளுக்கு இடையிலான பல்வேறு சிக்கல்களை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க தயாராக இருக்கிறோம் எனத் தெரிவித்து இருந்தார். இந்நிலையில், பிரதமர் இம்ரான் கான் கோரிக்கையை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டுள்ளார்.

 Sushma Swaraj will meet Pakistan Foreign Ministe

நியூயார்க்கில் அடுத்தவாரம் நடைபெறவுள்ள ஐநா சபைக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் குரேஷியைச் சந்தித்துப் பேசுவார் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இரு அமைச்சர்களும் சந்திக்கும் தேதியும், நேரமும் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ரவிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios