Sushma Swaraj comes down heavily on Pakistan for terrorism Officials
பாகிஸ்தான் தீவிரவாதத்தை அரசின் ஒரு கொள்கையாக பயன்படுத்துவதையும், தீவிரவாதிகளுக்கு புகலிடம் அளிப்பதையும் நிறுத்த வேண்டும் என்று பிரிக்ஸ், சார்க் உள்ளிட்ட சர்வதேச கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்களிடம் பேசும் போது, மத்திய சுஷ்மாசுவராஜ் வலியுறுத்தினார்.
நியூயார்க் நகரில் ஐக்கிய நாடுகள் அவையின் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தில் இந்தியா சார்பில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மாசுவராஜ் கலந்து கொண்டுள்ளார்.
கூட்டமைப்பு நாடுகள்
இந்த கூட்டத்தின் இடையே பிரிக்ஸ்(பிரேசில், இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா, ரஷியா), ஐ.பி.எஸ்.ஏ.(இந்தியா, பிரேசில், தெற்காசியா), சார்க் நாடுகள், ஐ.சி.இ.எல்.ஏ.சி.(லத்தின்அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகள்) ஆகிய கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்களை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சந்தித்துப் பேசினார். அப்போது, தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், தீவிரவாதத்தை அடியோடு ஒழிப்பது குறித்தும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ராவீஸ்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது-
நிறுத்த வேண்டும்
சார்க், பிரிக்ஸ், ஐ.பி.எஸ்.ஏ. உள்ளிட்ட கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்களுடனான சந்திப்பின் போது, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், தீவிரவாதம் குறித்தும் தீவிரமாக வலியுறுத்தி பேசினார்.
தீவிரவாதிகள் ஒரு சில நாடுகளின் உதவியுடன் செயல்பட்டு வருவதைக் கடுமையாகக் கண்டித்தார். இது முக்கியமாக பாகிஸ்தானுக்கு எதிரான தீவிரமான எச்சரிக்கையாகும். பாகிஸ்தான் அரசு தீவிரவாதத்தை தனது கொள்கையாக வைத்து செயல்படுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
ஐக்கிய நாடுகள் அவையால் அறிவிக்கப்பட்ட தீவிரவாதிகளுக்கு புகலிடம் அளிப்பதையும் நிறுத்த வேண்டும். தீவிரவாத வலைதளத்தையும், செயல்பாடுகளையும், நிதி உதவி செய்தலையும் அழிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
தீர்மானத்தை கடைபிடிக்க வேண்டும்
பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களுடனான சந்திப்பின்போது, சுஷ்மா பேசுகையில், சமீபத்தில் நடந்த ஜியாமென் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை பிரிக்ஸ் நாடுகள் தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டு, ஐ.நா. பாதுகாப்புகவுன்சிலின் சீர்திருத்தம் குறித்து அவர் கூட்டறிக்கை வெளியிட்டது முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
2018ல் மாநாடு
ஐ.எஸ்.பி.ஏ. நாடுகளின் தலைவர்களுடன் பேசும்போது, உலகத்துக்கே தீவிரவாதம் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்து வருகிறது என்று சுஷ்மா வருத்தம் தெரிவித்தார். இதை அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொண்டன. மேலும், 2018ம் ஆண்டு ஐ.பி.எஸ்.ஏ. நாடுகளின் 6-வது மாநாட்டை இந்தியா நடத்துவது குறித்தும் அவர் பேசினார்.
சார்க் நாடுகளின் தலைவர்களுடன் சுஷ்மா பேசுகையில், தெற்கு ஆசிய செயற்கைக்கோள் குறித்தும், தெற்காசிய பல்கலைக்கழகம் குறித்தும், சார்க் பேரிடர் ேபரிடர் ேமலாண்மை மையம் உருவாக்குவது குறித்தும் பேசினார்.
மனித குலம்
மேலும், தீவிரவாதம் என்பது மனித இனத்துக்கு மிகப்பெரிய கவலையளிக்கும் ஒரு விஷயம் என்றும், அதை வேறருக்கப்பட வேண்டும் என்று சுஷ்மா உலகத் தலைவர்களிடம் வலியுறுத்தினார். தீவிரவாதம் மனித குலத்துக்கு கவலையையும், அச்சத்தையும் ஏற்படுத்தும் ஒன்று உலகத் தலைவர்கள் ஏற்றுக்கொண்டனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
