பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும் இந்தியாவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான சுஷ்மா சுவராஜ் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று இரவு காலமானார். ஆனால், அவர் அரசியல் பிரவேசத்திற்கு பிறகு மீனவர்கள் மற்றும் வெளிநாடுகளில் சிக்கிய இந்தியர்களை மீட்பது உள்ளிட்ட எண்ணற்ற சாதனைகளை புரிந்துள்ளார். 

சுஷ்மா சாதனைகள்;-

* 1977-ம் ஆண்டு அவரது 25-வது வயதில் இந்தியாவின் இளம் கேபினட் அமைச்சரானார் சுஷ்மா ஸ்வராஜ்.

* 1979-ம் ஆண்டு 27 வயதில் அரியானா மாநில ஜனதா கட்சியின் தலைவரானார்.

* தேசிய அளவிலான கட்சியில் செய்தித் தொடர்பாளர் பதவியை வகித்த முதல் பெண் சுஷ்மா ஸ்வராஜ்.

* இந்தியாவின் முதல் பெண் எதிர்க்கட்சி தலைவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. 2009-ம் ஆண்டு டிசம்பர் 21 அன்று அத்வானிக்கு மாற்றாக சுஷ்மா எதிர்க்கட்சி தலைவராக பதவி ஏற்றுக் கொண்டார்.

* மே 26, 2014-ல் ஆண்டு இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சரானார். 

* 2008 மற்றும் 2010-ம் ஆண்டுகளில் சிறந்த நாடாளுமன்றவாதிக்கான விருதை அவர் பெற்றார். மிகச்சிறந்த நாடாளுமன்றவாதி என்ற விருதை பெற்ற இந்தியாவின் முதல் மற்றும் ஒரே பெண் நாடாளுமன்ற உறுப்பினர் இவர்தான்.