மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜிக்கு, இஸ்லாமியை வாலிபர் கிட்னியை கொடுக்க முன்வந்துள்ளார். அவரது டுவிட்டர் பக்கத்தில், தனதுதாய் போன்ற தோற்றம் கொண்டவராக இருக்கிறீர்கள் என கூறியுள்ளார். இதனை மதம் கடந்த மனித நேயம் என கூறுகின்றனர்.
மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், கடந்த 2 நாட்களுக்கு முன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், கிட்னி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
இதையடுத்து, அமைச்சர் சுஷ்மா சுவராஜ், கடவுள் கிருபையில் பூரண குணமாகிவிடுவார். அவருக்கு கடவுள் என்றும் துணை இருப்பார் என பலரும், டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து கூறினர்.

அதற்கு சுஷ்மாசுவராஜ், உங்களது வாழ்த்துகளும், கிருஷ்ணரின் அருளாளும் நான் பூரண குணமாகி விடுவேன் என கூறியிருந்தார்.
இந்நிலையில், முஜிப் அன்சாரி என்ற வாலிபர், டுவிட்டர் பக்கத்தில் சுஷ்மா சுவராஜ்க்கு வாழ்த்து கூறினார். அதில் அவர் கூறியிருப்பதாவது, மேடம் நான் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியில் இருக்கிறேன். இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவன். எனது கிட்னியை உங்களுக்கு கொடுக்க நான் விரும்புகிறேன். காரணம், நீங்கள் எனது அம்மாவை போன்ற தோற்றத்தில் இருக்கிறீர்கள் என கூறியிருந்தார்.
அதற்கு பதில் அளித்த சுஷ்மா சுவராஜ், மிக்க நன்றி சகோதரரே. மனித உறுப்புக்கும், மதத்துக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. நான், யாரையும் எவ்விதத்திலும் பாதிப்படைய செய்ய மாட்டேன் என கூறியிருந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன் பாகிஸ்தான் வாலிபரை திருமணம் செய்து கொண்ட இந்திய பெண், அந்நாட்டுக்கு செல்ல முடியாமல் தவித்தார். அப்போது, அவர் பாகிஸ்தான் செல்ல, அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உதவி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை மதம் கடந்த மனித நேயம் என கூறுகின்றனர்.
