சிறுநீரக கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள, வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கு, தன் சிறுநீரகத்தை தானமாக வழங்க, தெலுங்கு தேச எம்.பி., முன்வந்துள்ளார். 

சிறுநீரக பாதிப்பு காரணமாக கடந்த 7-ஆம் தேதி டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் மத்திய வெளியறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ நிபுணர்கள்‌ அவரை தொடர்ந்து கண்காணித்து, தேவையான சிகிச்சைகளை அளித்து வருகின்றனர். சிறுநீரக செயலிழப்பு காரணமாக டயாலிசஸ் சிகிச்சை அவருக்‍கு அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், அவருக்கு, தன் சிறுநீரகத்தை தானமாக வழங்க, தெலுங்கு தேச எம்.பி., ராயபதி சாம்பசிவ ராவ் முன்வந்துள்ளார். இது குறித்து, சுஷ்மாவுக்கு கடிதம் எழுதிய அவர், கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:

சிறந்த அமைச்சராகவும், வெளியுறவுத்துறை அமைச்சராகவும் பறியாற்றி வரும் சுஷ்மா சுவராஜ் மிகச் சிறந்த தலைவர். தங்களுக்கு ஏற்பட்டுள்ள உடல்நலக் குறைவு குறித்து கேள்விப்ட்டு மிகவும் வருந்துகிறேன். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக எனது சிறுநீரகத்தை தானமாக கொடுக்க விரும்புகிறேன். அதனை தாங்கள் ஏற்றுக்கொண்டால் மிகவும் மகிழ்ச்சி. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.