Asianet News TamilAsianet News Tamil

ஆண்டுக்கு ஆண்டு அடிக்குது ஜாக்பாட்..!! : "ஊழியர்களுக்கு 400 வீடுகள், 1260 கார்கள்... சூரத் வைர வியாபாரியின் ‘கவனிப்பு’ தொடர்கிறது

surat businessman-diwali-gift-to-his-staffs
Author
First Published Oct 28, 2016, 7:59 AM IST


குஜராத் மாநிலம், சூரத் நகரைச் சேர்ந்த வைர வியாபாரி சவ்ஜி தோலக்யா இந்த ஆண்டும் தனது நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 400 வீடுகள், 1260 கார்களை தீபாவளிப்பரிசாக அளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

கடந்த ஆண்டு இதே போல், தனது நிறுவனத்தில் பணியாற்றும் 491 ஊழியர்களுக்கு காரும், 200 பேருக்கு ‘பிளாட்டு’களையும் பரிசாக அளித்து அசத்திய வைர வியாபாரி இந்த முறையும் ஊழியர்களை மகிழ்ச்சியில் திளைக்க வைக்க தவறவில்லை.

ஹரே கிருஷ்ணா ஏற்றுமதி நிறுவனம் என்ற பெயரில் வைர நிறுவனத்தை நடத்தி வருகிவார் சவ்ஜி தோலக்யா. இந்த இந்த ஆண்டு தனது நிறுவனத்தில் சிறப்பாகப் பணியாற்றும்  ஆயிரத்து 716 ஊழியர்களுக்கு பரிசுகள் அளித்து சிறப்புச் செய்ய விரும்பினார்.

surat businessman-diwali-gift-to-his-staffs

அதன்படி, 400 ஊழியர்களுக்கு ஒரு ‘பிளாட்’ மற்றும் ஆயிரத்து 260 கார்களும் ஊழியர்களுக்கு பரிசாக அளித்துள்ளார். இதற்கான பரிசளிப்பு நிகழ்ச்சி எந்தவிதமான ஆடம்பரமும் இல்லாமல் சூரத்தில் சமீபத்தில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்த பரிசுக்காக சவ்ஜி தோலக்யா ரூ. 51 கோடி செலவு செய்துள்ளார்.

surat businessman-diwali-gift-to-his-staffs

இவரைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால், தனது மகனுக்கு பணத்தின் அருமை குறித்து தெரிய வேண்டும் என்பதற்காக, கொச்சியில் 3 செட் ஆடைகள், ரூ. 7 ஆயிரம் பணத்துடன் ஒரு நிறுவனத்தில் பணியாற்றக் கூறினார். அப்போதுதான் பணத்தின் அருமை தெரியும், இருக்கும் சொத்தை பாதுகாக்க முடியும் என தனது வித்தியாசமான செயலால் நாடெங்கும் ஊடகத்தில் செய்தியானார்.

surat businessman-diwali-gift-to-his-staffs

குஜராத்தின் அமரேலி மாவட்டம் துத்ஹலா கிராமத்தைச் சேர்ந்தவரான சவ்ஜி தோலக்யா பணக்கார குடும்பத்தில்  பிறந்தவர் அல்ல. தனது மாமாவிடம் கடன் பெற்று இந்த வைர வியாபாரத்தை தொடங்கி, இன்று இந்த அளவுக்கு முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios