Asianet News TamilAsianet News Tamil

பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா சிறையில்.. ஓரின சேர்க்கை புகாரில் தம்பி சூரஜ் ரேவண்ணா கைது!

முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் மூத்த மகன் எச்.டி.ரேவண்ணா. தற்போது எம்எல்ஏவாக இருந்து வருகிறார். இவரது மகன்கள் பிரஜ்வல் ரேவண்ணா, சூரஜ் ரேவண்ணா. இவர்களில் பிரஜ்வல் ரேவண்ணா ஹாசன் தொகுதி முன்னாள் எம்.பி. ஆவார். சூரஜ் ரேவண்ணா தற்போது எம்.எல்.சி.யாக உள்ளார்.

Suraj Revanna arrested for alleged sexual assault of male  tvk
Author
First Published Jun 23, 2024, 11:12 AM IST

பாலியல் வழக்கில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், முன்னாள் அமைச்சர் ரேவண்ணாவின் மகனுமான சூரஜ் ரேவண்ணா கைது செய்யப்பட்டுள்ளார். 

முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் மூத்த மகன் எச்.டி.ரேவண்ணா. தற்போது எம்எல்ஏவாக இருந்து வருகிறார். இவரது மகன்கள் பிரஜ்வல் ரேவண்ணா, சூரஜ் ரேவண்ணா. இவர்களில் பிரஜ்வல் ரேவண்ணா ஹாசன் தொகுதி முன்னாள் எம்.பி. ஆவார். சூரஜ் ரேவண்ணா தற்போது எம்.எல்.சி.யாக உள்ளார். 

Suraj Revanna arrested for alleged sexual assault of male  tvk

இந்நிலையில், பிரஜ்வல் ரேவண்ணா (33) பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் 300க்கும் மேற்பட்ட வீடியோக்கள் வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது வீட்டு பணிப்பெண், கட்சியின் பெண் நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் அளித்த புகாரில், வெளிநாட்டில் இருந்து திரும்பிய பிரஜ்வல் ரேவண்ணா விமான நிலையத்தில் வைத்து கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Suraj Revanna arrested for alleged sexual assault of male  tvk

இந்நிலையில் பிரஜ்வல் ரேவண்ணாவை தொடர்ந்து அவரது சகோதரர் சூரஜ் ரேவண்ணா மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வேலை வாங்கித்தர அணுகியபோது பாலியல் தொந்தரவு கொடுத்ததாக 24 வயது மஜத கட்சியை சேர்ந்த இளைஞர் புகார் அளித்திருந்தார். இந்த புகாரை அடுத்து சூரஜ் ரேவண்ணாவை போலீசார் கைது செய்துள்ளனர். 

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கில் சிக்கி சிறையில் உள்ளார். தந்தை ரேவண்ணா பெண் கடத்தல் வழக்கில் கைதாகி ஜாமீனில் உள்ன நிலையில் மற்றொரு ஓரின சேர்க்கை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம்  தேவகவுடா குடும்பத்தினரை கவலையில் ஆழ்த்தியுள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios