கல்வியால் நம்முடைய கைரேகை கையெழுத்தானது என்றும் தொழில் நுட்பத்தால் நம்முடைய கையெழுத்து கைரேகையாக மாறியிருக்கிறது என்றும் ஆதார் எண் கட்டாயம் என்ற மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நீதிபதி சிக்ரி தெரிவித்துள்ளார். 

கல்வி என்பது ஒவ்வொருவரின் அடிப்படை உரிமை என்பதால் அதில் ஆதாரை கட்டாயமாக்கக் கூடாது. வங்கி கணக்குகள் திறக்க, மொபைல் எண்கள் பெற ஆதார் கட்டாயமில்லை. சி.பி.எஸ்.இ., நீட் தேர்வுகளுக்கு ஆதாரை கட்டாயமாக்கக் கூடாது. பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கும் ஆதார் கட்டாயமாக்கக் கூடாது.

 

குடிமக்களுக்கான அடிப்படை உரிமை, ஆதார் இல்லை என்பதற்காக மறுக்கப்படக் கூடாது. தனியார் நிறுவனங்கள் ஆதாரை கட்டாயப்படுத்தக் கூடாது. கல்வியால் நம்முடைய கைரேகை கையெழுத்தானது. தொழில்நுட்பத்தால் நம்முடைய கையெழுத்து கைரேகையாக மாறியிருக்கிறது. பான் என்ணுடன் ஆதார் இணைப்பது கட்டாயம் என்று நீதிபதி சிக்ரி தீர்ப்பில் கூறியுள்ளார்.