ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் ஆகஸ்டு 2 முதல் தினசரி விசாரணை

சிறப்பு அந்தஸ்து நீக்கம் தொடர்பான மனுக்கள் மீதான விசாரணை ஆகஸ்ட் 2 முதல் அரசியல் சாசன அமர்வில் தினம்தோறும் நடைபெறும்.

Supreme Court to hear petitions challenging scrapping of Article 370 from August 2

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது சட்டப்பிரிவை ரத்து செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் உச்ச நீதிமன்றத்தில் தினமும் விசாரிக்கப்பட உள்ளது.

தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், சஞ்சீவ் கண்ணா, பி.ஆர். கவாய் மற்றும் சூர்யா காந்த் ஆகியோர் அடங்கிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, திங்கள் மற்றும் வெள்ளி தவிர மற்ற நாட்களில் இந்த மனுக்கள் மீதான விசாரணை நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் 2ஆம் தேதி (புதன்கிழமை) காலை 10:30 மணிக்கு விசாரணை தொடங்க உள்ளது. ஆகஸ்ட் 5, 2019 முதல் சட்டப்பிரிவு 370 ஐ ரத்து செய்த ஜனாதிபதியின் உத்தரவுக்கு எதிரான மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும். சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மொத்தம் 23 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வழக்கு தொடர்ந்த அனைத்து தரப்பினரும் ஜூலை 25 ஆம் தேதிக்குள் அரசியல் சாசன அமர்வு முன்பு ஆன்லைன் முறையில் ஆஜராகுமாறு உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.

மத்திய அரசின் அவசரச் சட்டத்துக்கு தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறப்பு: டெல்லி அரசுக்குப் பின்னடைவு

Supreme Court to hear petitions challenging scrapping of Article 370 from August 2

இந்த விவகாரம் தொடர்பான அனைத்து கோப்புகள் மற்றும் ஆவணங்கள் காகிதமற்ற முறையில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. விசாரணையின்போது, ஜம்மு-காஷ்மீர் நிலைமை குறித்து மத்திய அரசு தாக்கல் செய்த புதிய பிரமாணப் பத்திரத்தை விசாரிக்க மாட்டோம் என்றும் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

அரசியலமைப்புச் சட்டப் பிரச்சனைகள் குறித்து மட்டுமே விசாரணை நடத்தப்படும் என்று அரசியல் சாசன அமர்வு கூறியுள்ளது.

விசாரணைக்கு முன், திங்களன்று மத்திய அரசு கூடுதல் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்து, சட்டப்பிரிவு 370 ஐ ரத்து செய்யும் முடிவை நியாயப்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கில் முன் எப்போது இல்லாத ஸ்திரத்தன்மையையும் நிலவுவதாகவும் கொண்டு வந்ததாகக் கூறியது.

2075ஆம் ஆண்டுக்குள் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா அமெரிக்காவை முந்தும்: கோல்டுமேன் சாக்ஸ் கணிப்பு

Supreme Court to hear petitions challenging scrapping of Article 370 from August 2

ஜூன் 2018 இல் மெஹபூபா முப்தியின் மக்கள் ஜனநாயகக் கட்சியுடனான ஆளும் கூட்டணியில் இருந்து பாஜக வெளியேறிய பிறகு ஜம்மு காஷ்மீர் குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ் வந்தது. அதன்பிறகு அங்கு சட்டமன்றத் தேர்தல் எதுவும் நடைபெறவில்லை.

2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது. அதற்குப் பதிலாக ஜம்மு மற்றும் காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டு ஜம்மு காஷ்மீர் மாநிலம் யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது.

மத்திய அரசின் அவசரச் சட்டத்துக்கு தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறப்பு: டெல்லி அரசுக்குப் பின்னடைவு

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios