கள்ளக்காதல் சட்டத்தால் என்ன நன்மை ஏற்படுகிறது என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கணவனின் சம்மதத்துடன் மனைவி வேறொருடன் கள்ளக்காதலில் ஈடுபடுவது குற்றமில்லை என கூறும்போது, 497-வது சட்டப் பிரிவால் என்ன பொது நன்மை ஏற்படப் போகிறது.
கள்ளக்காதல் சட்டத்தால் என்ன நன்மை ஏற்படுகிறது என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கணவனின் சம்மதத்துடன் மனைவி வேறொருடன் கள்ளக்காதலில் ஈடுபடுவது குற்றமில்லை என கூறும்போது, 497-வது சட்டப் பிரிவால் என்ன பொது நன்மை ஏற்படப் போகிறது?’ என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். கள்ளக்காதலில் ஈடுபடும் ஆண் மீது வழக்கு தொடர வகை செய்யும் சட்டம் நம் நாட்டில் அமலில் உள்ளது. ஆனால் அந்த சட்டப்படி ஒரு பெண் கள்ளக்காதலில் ஈடுபட்டால் அவர் மீது வழக்கு பதிவு செய்ய முடியாது. அதுமட்டுமின்றி பெண்ணின் கள்ளக்காதல் உறவுக்கு கணவன் சம்மதித்தாலோ அல்லது உடந்தையாக இருந்தாலோ அது குற்றமாக கருதப்படாது என இந்த சட்டப்பிரிவு கூறுகிறது.

இவ்வாறு முரண்பாடுகளுடனும் உள்ள இந்த சட்டப்பிரிவு 158 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது. இந்த சட்டப்பிரிவை ரத்து செய்ய வேண்டும் என இத்தாலியில் வசிக்கும் இந்தியர் ஜோசப் சைனி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு கடந்த ஜனவரி 5ம் தேதி, 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது.
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் நாரிமன், கன்வில்கர், சந்திராசூட், இந்து மல்கோத்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த வழக்கை தொடர்ந்து விசாரித்து வருகிறது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிடர் ஜெனரல் பிங்கி ஆனந்த் வாதிடுகையில், திருமணம் ஒரு புனிதமான அமைப்பு முறை. இதில் கள்ளக்காதல் குற்றம். திருமணத்தையும், குடும்ப அமைப்பையும் சிதைப்பதால்தான் கள்ளக்காதல் குற்றம் என கூறப்படுகிறது. கள்ளக்காதல் குற்றமல்ல என்று கூறப்பட்ட வெளிநாட்டு தீர்ப்புகளை கணக்கில் கொள்ளக் கூடாது என்றார்.

அப்போது நீதிபதிகள் கூறுகையில் இந்த சட்டப்பிரிவின்படி ஒரு பெண் மற்றொரு ஆணுடன் உறவு வைத்திருக்க கணவன் சம்மதித்தால் அது கள்ளக்காதல் இல்லை என கூறப்படுகிறது. இது ஒரு சட்டமா? இதன் மூலம் திருமணத்தின் புனிதத் தன்மை காக்கபடுமா? இந்த சட்டப்பிரிவின் படி இது பெண் சார்ந்ததாக உள்ளது. ஆணுக்கு எதிராக உள்ளது. இப்படி ஒரு முரண்பாடன சட்டம் தேவையா? என கேள்வி எழுப்பி உள்ளது.
