அதானி குழுமம் மோசடி தொடர்பான வழக்குகளில் மத்திய அரசின் யொசனையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. 

அதானி குழுமம் மோசடி தொடர்பான வழக்குகளில் மத்திய அரசின் யொசனையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. அதானி குழுமம் தங்கள் பங்குகளின் மதிப்பை உயர்த்திக் காட்டுவதற்காக மோசடி செய்ததாக அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் குற்றம்சாட்டியது. இதை அடுத்து பங்கு சந்தைகளில் அதானி குழுமத்தின் மதிப்புகள் சரிவடைந்தன. அதானி குழும மோசடிகள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே பொதுநலன் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த பொதுநலன் வழக்குகளை உச்சநீதிமன்றம் விசாரித்து மத்திய அரசுக்கும் பங்கு சந்தையை ஒழுங்குபடுத்தும் செபி அமைப்புக்கும் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. அதன் அடிப்படையில் உச்சநீதிமன்றத்தில் செபி அமைப்பும் அறிக்கை தாக்கல் செய்தது.

இதையும் படிங்க: ஹரியானாவில் எரிந்த நிலையில் ஜீப்பில் இரு சடலங்கள்: ராஜஸ்தான் முதல்வருக்கு விஎச்பி கண்டனம்

அதில், அதானி குழும மோசடிகள் குறித்து கண்காணித்து வருகிறோம் என செபி தெரிவித்திருந்தது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் ஜெயா தாக்கூர் திடீரென உச்சநீதிமன்றத்தில் அதானி குழும மோசடிகள் தொடர்பாக விசாரிக்க கோரி புதிய மனுவைத் தாக்கல் செய்தார். இம்மனுவை தலைமை நீதிபதி சந்திரசூட், நரசிம்மா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரணைக்கு ஏற்றது. இதனிடையே உச்சநீதிமன்றத்தில் அதானி குழுமத்துக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. முகேஷ் குமார் என்பவர், அதானி குழுமத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார். அதானியின் பங்கு சந்தை மோசடி குறித்து உச்சநீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று முகேஷ் குமார் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:  கர்நாடக பட்ஜெட்| காதில் பூ வைத்து வந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள்

உச்சநீதிமன்றத்தில் அதானி குழும மோசடிகள் தொடர்பாக 4 வழக்குகள் தொடரப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்குகளை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தியது. அப்போது சீலிட்ட கவரில் அறிக்கை தாக்கல் செய்யத் தயார் என்ற மத்திய அரசு கூறிய நிலையில், மத்திய அரசின் யோசனையை தலைமை நீதிபதி நிராகரித்தார். எந்தத்துறையின் பரிந்துரையும் ஏற்க போவதில்லை என்று கூறிய உச்சநீதிமன்ற நீதிபதி, நீதிமன்றமே ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் நிபுனர் குழு அமைக்கும் என்றும் உச்சநீதிமன்றம் அமைக்கும் வல்லுநர் குழுவுக்கு அனைத்து துறை அதிகாரிகளும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் தெரிவித்து வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.