காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்று கூறிய மத்திய அரசு திடீரென பின் வாங்கியது ஏன் என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், தமிழகத்துக்கு உரிய விளக்கம் அளிவுக்கவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக 2007 ஆம் ஆண்டில் காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதி தீர்ப்பு குறித்து தமிழகம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் மனு தாக்கல் செய்துள்ளன. இந்த மனுக்கள் மீது உச்சநீதிமன்றத்தில் இறுதி விசாரணை நடைபெற்று வருகிறது.

கர்நாடகம், கேரள அரசுகளின் வாதம் ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவராய், ஏ.எம். கான்வில்கர் ஆகியோர் அடங்டிகய அமர்பு முன்பு இறுதி விசாரணை நடைபெற்று வருகிறது. 

காவிரி வழக்கில் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய நீதி அலைகழிக்கப்படுவதாக தமிழக அரசு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் வாதிட்டனர். இன்னும் 8 தினங்களுக்கு தமிழக அரசின் வாதங்களை தொடர்ந்து வைக்கப்படும் என தெரிகிறது.

தமிழக அரசின் வாதங்களை கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், காவிரி மேலாண்மை வாரியம் அமைச்ச மத்திய அரசு பின்வாங்கியது ஏன் என்று கேள்வி எழுப்பினர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்று கூறிய மத்திய அரசு திடீரென பின்வாங்கியது ஏன் என்றும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மத்திய அரசு வழக்கறிஞர்கள் தமிழகத்துக்கு உரிய விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர்.