தெரு நாய்களுக்கு உணவளிப்பது தொடர்பான வழக்கில், நாய்களுக்கு கருத்தடை செய்வது மட்டுமின்றி தெருக்களை நாய் இல்லாத பகுதிகளாக மாற்ற வேண்டும் என நீதிபதிகள் பரிந்துரைத்துள்ளனர்.

Street Dog bite incidents : தெரு நாய்களின் தாக்குதலால் குழந்தைகள் மற்றும் முதியோர் பாதிக்கப்படுவது, ரேபிஸ் நோய் பரவுவது மட்டுமில்லாமல் இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து ஏற்படுகிறது. மேலும் பைக்கில் செல்லும் போது கூட நாய்கள் துரத்துவதால் அச்சத்தால் வேகமாக பைக் ஓட்டி விபத்து ஏற்படுத்தி உயரிழப்பும் நிகழ்ந்து வருகிறது.எனவே தெருநாய்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் டெல்லியைச் சேர்ந்த ஒருவர் தெரு நாய்களுக்கு உணவளிப்பது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவர், தெரு நாய்களுக்கு உணவளிக்க தனியான இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்றும், கண்ட இடங்களில் உணவு வழங்குவதை தடுக்க வேண்டும் என்றும் கோரினார்.

தெரு நாய்கடியால் உயிரிழப்பு

இதனையடுத்து நீதிபதிகள் தெரு நாய்களால் பொதுமக்களுக்கு, குறிப்பாக காலை நடைப்பயிற்சி செய்பவர்கள் மற்றும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து உள்ளதாகவும் கவலை தெரிவித்தார். மேலும் நீதிபதி விக்ரம் நாத் கூறுகையில், "தெரு நாய்களை வீட்டுக்கு அழைத்துச் சென்று உணவளிக்கலாமே, ஏன் கூடாது?" என்று கேள்வி எழுப்பினார். கடந்த 2024ஆம் ஆண்டில் மட்டும் 37 லட்சத்து 17 ஆயிரத்து 336 பேர் தெரு நாய் கடியால் பாதிக்கப்பட்டதாகவும், இதில் குழந்தைகள் மற்றும் முதியோர் அதிகம் பாதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டது.

தெரு நாய்களை பிடிக்க 8 வார காலம் அவகாசம்

இதனையடுத்து இன்று மீண்டும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்த போது, மூத்த வழக்கறிஞர் கவுரவ் அகர்வால், தெரு நாய்களுக்கு கருத்தடை செய்வது மட்டும் போதாது, தெருக்களை தெரு நாய்கள் இல்லாதவாறு மாற்ற வேண்டும் என்று பரிந்துரைத்தார். இன்று வழக்கு விசாரணையின் போது இந்தியாவில் மக்கள் வாழும் பகுதிகள் தெரு நாய் இல்லாத பகுதியாக மாற்ற வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர். நாடு முழுவதும் உள்ள தெரு நாய் பிரச்சனைகளை போர்க்கால அடிப்படையில் தீர்க்க வேண்டிய நிலை உள்ளது என கூறிய நீதிபதி தெரு தெருநாய்களை பிடிக்க 8 வாரங்கள் அவகாசம் வழங்கப்படுவதாகவும் நீதிபதி தெரிவித்தார்.