Asianet News TamilAsianet News Tamil

பிரதமர் மோடி திருடனா..? ராகுல்காந்திக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்..!

ரஃபேல் விவகாரத்தில் பிரதமர் மோடியை திருடன் என விமர்சித்ததாக பாஜக தொடர்ந்த வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஏப்ரல் 22-ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு ராகுலுக்கு உத்தரவிட்டுள்ளது. 

Supreme Court notice to Rahul Gandhi
Author
Delhi, First Published Apr 15, 2019, 12:53 PM IST

ரஃபேல் விவகாரத்தில் பிரதமர் மோடியை திருடன் என விமர்சித்ததாக பாஜக தொடர்ந்த வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஏப்ரல் 22-ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு ராகுலுக்கு உத்தரவிட்டுள்ளது. Supreme Court notice to Rahul Gandhi

ரஃபேல் ஒப்பந்தத்தில் எவ்வித முறைகேடும் நடந்ததற்கு ஆதாரம் இல்லை என உச்சநீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்து இருந்த நிலையில், இந்த ஒப்பந்தம் தொடர்பான சில முக்கிய ஆவணங்கள் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. எனவே அவற்றை ஆதாரமாக கொண்டு  உச்சநீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. Supreme Court notice to Rahul Gandhi

இவற்றை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், புதிய ஆவணங்கள் அடிப்படையில் ரஃபேல் ஒப்பந்தம் குறித்து விசாரணை நடத்தப்படும் என கடந்த 10–ம் தேதி உத்தரவிட்டது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு மத்திய அரசுக்கு பின்னடைவாக கருதப்பட்டது.  இதனை சுட்டிக்காட்டிய ராகுல், காவலாளியே திருடன் என்பதை உச்சநீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளதாக கூறினார். Supreme Court notice to Rahul Gandhi

இந்நிலையில் ரபேல் குறித்த உத்தரவில் பிரதமர் மோடியை பற்றி உச்சநீதிமன்ற நீதிபதி எதுவுமே கூறாத நிலையில், அவர் பேச்சை ராகுல்காந்தி திரித்து கூறியுள்ளார். மேலும் ராகுலின் இந்த பேச்சு உச்சநீதிமன்ற தீர்ப்பை விமர்சனம் செய்வது போல் உள்ளதாக கூறி பாஜக-வை சேர்ந்த மீனாக்ஷி லேகி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது பிரதமர் மோடியை திருடன் என விமர்சித்த ராகுல்காந்தி ஏப்ரல் 22-ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என கூறி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.   

Follow Us:
Download App:
  • android
  • ios