supreme court judgement regarding child marriage

15 முதல் 18 வரையிலான சிறுமிகளை திருமணம் செய்து பாலியல் உறவு கொண்டால் அது பாலியல் வன்கொடுமையாக கருதப்படும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

18 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு திருமணம் செய்யக்கூடாது என்ற சட்டம் உள்ளது. ஆனாலும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் 18 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு கட்டாய திருமணம் செய்துவைக்கப்படுகிறது.

சிறுமிகளுக்கு திருமணம் செய்துவைப்பதால் அவர்களுக்கு அந்த சிறுவயதில் குழந்தையை சுமக்கக்கூடிய சக்தி கிடையாது. ஆனாலும் கர்ப்பம் தரித்து சிரமப்படுகின்றனர். இதைத்தடுக்க குழந்தை திருமணத்தைத் தடுக்க வேண்டும் என கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யபப்ட்ட மனு இன்று விசாரணைக்கு வந்தது. 

வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், 18 வயதிற்கு உட்பட்ட சிறுமிகளை திருமணம் செய்து, அவருடன் உறவு கொண்டால் அது பாலியல் பலாத்காரமாக கருதப்படும். திருமணமாகி ஓராண்டிற்குள் கணவர் மீது அந்த பெண் புகார் அளித்தால், அது பாலியல் பலாத்காரமாக கருதப்படும். 15 முதல் 18 வயதுள்ள சிறுமிகளை திருமணம் செய்து உறவு கொள்வதும் பலாத்காரமாக தான் கருதப்படும் என பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.