ஆண் - பெண் இடையேயான கள்ள உளவு குறித்து உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. வயதுக்கு வந்த ஆண் - பெண் இடையேயான கள்ளத்தொடர்பு கிரிமினல் குற்றம் அல்ல என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 

இந்திய தண்டனை சட்டத்தின் 497-வது பிரிவின்படி, கள்ளக்காதலில் ஈடுபடும் ஆணுக்கு அதிகபட்சமாக 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனையோ அல்லது அபராதமோ விதிக்க முடியும். ஆனால், கள்ளக்காதலில் ஈடுபடும் மனைவி தண்டிக்கப்பட மாட்டார். இதை எதிர்த்து இத்தாலியில் வசிக்கும் இந்தியர் ஜோசப் சைனி என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் மனு தாக்கல் செய்தார். 

அதில் அவர், ஒருவர் மற்றொருவரின் மனைவியுடன் அவரின் சம்மதத்துடன் பாலியில் உறவு கொள்ளும்போது ஆண்கள் மட்டுமே தண்டிக்கப்படுகின்றனர். இருதரப்பினர் சம்மதத்துடன் பாலியில் உறவு நடக்கும்போது, அதில் ஒரு தரப்பினரை மட்டும் பொறுப்பிலிருந்து விடுவிப்பது நியாயம் இல்லை என கூறியுள்ளார். மேலும், திருமணத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்புடைய குற்றவியல் நடைமுறை சட்டத்தின் 198(2)-வது பிரிவுக்கு எதிராகவும் அவர் வழக்கு தொடர்ந்தார். 

இது தொடர்பான வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 பேர் கொண்ட அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. முதலில் தீர்ப்பை வாசித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ஒரு பெண்ணுடைய எஜமானராக கணவரை ஒருபோதும் கருத முடியாது. ஆணுக்கு சமமாக பெண்ணை நடத்த வேண்டும். கள்ள உறவு கிரிமினல் குற்றமல்ல. தகாத உறவால் யாரும் தற்கொலைக்கு தூண்டப்படாதவரையில் குற்றமில்லை. ஆணுக்கு மட்டும் தண்டனை பிரிவு சட்டவிரோதமானது. இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 497-ஐ 3 நீதிபதிகள் ரத்து செய்துள்ளனர்.