Asianet News TamilAsianet News Tamil

பணமதிப்பிழப்பு வழக்கில் ஜன.2 ஆம் தேதி தீர்ப்பு... அறிவித்தது உச்ச நீதிமன்றம்!!

மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் ஜனவரி 2 ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்குவதாக அறிவித்துள்ளது. 

Supreme Court has announced the verdict in the demonetization case on Jan 2
Author
First Published Dec 23, 2022, 8:01 PM IST

மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் ஜனவரி 2 ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்குவதாக அறிவித்துள்ளது. முன்னதாக கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். இந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் கள்ளநோட்டு புழக்கம் கட்டுப்படுத்தப்படும் என்றும், தீவிரவாதிகளிடம் உள்ள பணம் அழிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு மக்கள் பெரும் இன்னல்களை அனுபவித்து வந்தனர்.

இதையும் படிங்க: இந்தியாவில் பரவும் கொரோனா.. மக்கள் பீதி அடைய தேவையில்லை !! - அப்பல்லோ மருத்துவமனை அறிவுறுத்தல்!

இதை அடுத்து மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து 57 ரிட் மனுக்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் விசாரணை நடத்திய நிலையில், உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில் சமீபத்தில் உச்ச நீதிமன்றத்த்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும் என்று மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

இதையும் படிங்க: டெல்லியில் நாளை ராகுல் காந்தி யாத்திரை… கமல்ஹாசன் பங்கேற்பதாக அறிவிப்பு!!

மத்திய அரசு தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கட்ரமணி, பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மறு பரிசீலனை செய்யக்கூடாது. உச்ச நீதிமன்றம் இதில் தலையிட வேண்டாம் என்று தெரிவித்தார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் அப்துல்நசீர், பி.ஆர்.கவாய், போபண்ணா, ராமசுப்ரமணியம், பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய ஐந்து பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு, வரும் ஜனவரி 2 ஆம் தேதி தீர்ப்பு வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios