supreme court condemns central government
அரசு அதிகாரிகள் மீது சுமத்தப்படும் ஊழல், மெத்தனம், பாரபட்சம் போன்ற குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் கோர்ட் போன்ற அரசு அமைப்பு தான் லோக்பால்.
பொதுமக்கள், அரசு அதிகாரிகள் மீது லோக்பாலிடம் புகார் கொடுக்கலாம். அந்த புகாரை லோக்பால் விசாரித்து, நடவடிக்கை எடுக்கும். லோக்பால் உருவானால், துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு, ஊழல் கட்டுப்படுத்தப்படும் என்ற பொது கருத்து நிலவுகிறது.
லோக்பாலின் செயல்பாடுகள், அதிகாரங்கள் போன்றவற்றை நிர்ணயிக்கும் சட்டம் தான் லோக்பால் சட்டம்.
கடந்த காங்கிரஸ் ஆட்சியில் ஊழலை ஒழிப்பதற்கான லோக்பால் சட்ட மசோதா கொண்டு வரப்பட்டது. ஆனால், அதை நடைமுறைப்படுத்தாமல், காலம் கடத்தப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், லோக்பால் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிப்பதில் மத்திய அரசு தாமதிப்பதாக வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
ஊழலை ஒழிக்கும் வகையில் லோக்பால் சட்டத்தை உடனே கொண்டு வரவேண்டும். எதிர்க்கட்சி தலைவர் இல்லாததால், காலதாமதம் செய்வது நியாயமானது இல்லை. உச்சநீதிமன்றம் உத்தரவை மீறுவது சரியானதாகவும் இல்லை என கண்டனம் தெரிவித்தது. மேலும், லோக்பால் சட்டத்தை உடனடியாக அமல்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டது.
எதிர்க்கட்சி தலைவர் இல்லாததால் தேர்வு குழு அமைப்பதில் தாமதம் செய்யக்கூடாது.லோக் ஆயுக்தா, லோக்பால் சட்டத்தையும், நியமனங்களையும் தாமதம் செய்வதால், மக்களுக்கு எந்த பயனும் இல்லை.
எனவே, மக்களுக்கு பயன் ஏற்டும் வகையில், உடனடியாக லோக்பால் சட்டத்தை கொண்டு வர உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
