உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அயோத்தி வழக்கு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

அயோத்தி வழக்கின் தீர்ப்பை நாடே எதிர்பார்த்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், அயோத்தி வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு முன் தினந்தோறும் விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு பிரிவினரும் அதாவது இஸ்லாமிய தரப்பினர், மத்திய அரசு, இந்து அமைப்பினர் மற்றும் இருக்கக்கூடிய பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் சார்பில் 15 நாட்கள், 20 நாட்கள் என வாதங்கள் வைக்கப்பட்டு வருகிறது. 

இதனிடையே, தலைமை நீதிபதி ஓய்வு பெறுவதற்குள் அயோத்தி வழக்கின் தீர்ப்பை வழங்க வேண்டும் என திட்டமிட்டுள்ளார். ஆகையால், அயோத்தி வழக்கின் விசாரணையை அக்டோபர் 18-ம் தேதிக்குள் வாதங்களையும் நிறைவு செய்ய உச்சநீதிமன்றம் முடிவு செய்திருந்தது. 

இந்நிலையில், தலைமை நீதிபதிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் அயோத்தி வழக்கின் விசாரணை தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.