supreme court cancelled karnataka petition on cauvery

தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிராக கர்நாடக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கடும் சட்டப்போராட்டத்தின் காரணமாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது.

மேலும் இந்த வழக்கில் கடந்த செப்டம்பர் மாதம் 20ம் தேதி காவிரியில் இருந்து 15 ஆயிரம் கன அடி தண்ணீர் தமிழகத்திற்கு திறக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதே போல் தொடர்ந்து பல முறை தண்ணீர் திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் கர்நாடக அரசு எந்த உத்தரவுக்கு செவிசாய்க்கவில்லை.

இந்நிலையில் இந்த உத்தரவை எதிர்த்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என்றும் காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிட போடப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் கடந்த ஆண்டு செப்டம்பர் 20ம் தேதியே 15 000 கன அடிநீர் திறந்து விட வேண்டும் என கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள் அதற்குப் பின்னும் பல முறை உத்தரவிட்டதாகவும் தெரிவித்தனர். 

ஆனால் உச்சநீதிமன்றத்தின் எந்த உத்தரவையும் மதிக்காத நிலையில் கர்நாடக அரசின் வழக்கை விசாரிக்க முடியாது எனக்கூறி நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.