தமிழகத்தில் மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிப்பது குறித்து தமிழக அரசு அவசர சட்ட வரைவை மத்திய அரசிடம் அளித்தது. இந்த அவசர சட்ட வரைவுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. 

இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தமிழக அரசு அவசர சட்ட வரைவு கொண்டு வந்துள்ளது செல்லாது. இதை செயல்படுத்தினால், சிபிஎஸ்இ மாணவர்கள் மாதிக்கப்படுவார்கள் என கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கு இன்று காலை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் தமிழக அரசின் அவசர சட்டம் குறித்து விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டு மதியத்துக்கு வழக்கை ஒத்திவைத்தது. 

இந்நிலையில் மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, நீட் தொடர்பான அவசர சட்டத்திற்கு நீதிமன்றங்கள் தடை விதிக்க முடியாது எனவும் சட்ட சிக்கல்கள் எதுவும் இல்லாததால் ஒப்புதல் வழங்கப்பட்டது எனவும் உச்சநீதிமன்றத்தில் வாதம் நடைபெற்றது. 

மேலும், சட்டவிதிகளுக்கு உட்பட்டே அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு விளக்கம் அளித்தது.

இந்நிலையில்,  தமிழகத்தில் மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.