Asianet News TamilAsianet News Tamil

அயோத்தி வழக்கு... அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற உச்சநீதிமன்றம் மறுப்பு!

அயோத்தி வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றத் தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Supreme Court Ayodhya verdict...no need to refer matter to larger bench
Author
Delhi, First Published Sep 27, 2018, 2:58 PM IST

அயோத்தி வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றத் தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் குறித்த வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த 2010 ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. Supreme Court Ayodhya verdict...no need to refer matter to larger bench

மொத்தமுள்ள 2.77 ஏக்கர் நிலத்தின் ஒருபகுதி நிர்மோகி அகாரா அமைப்புக்கும், மற்றொரு பகுதி ராமர் கோயில் கட்டவும், மீதமுள்ள பகுதி சன்னி வகுப்பு வாரியத்துக்கும் சொந்தம் என தீர்ப்பளித்தது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மூன்று தரப்பிலும் மேல்முறையீடு செய்யப்பட்டது. இது தொடர்பான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த மசூதிகள் அத்தியாவசியமில்லை என உச்சநீதிமன்றம் கடந்த 1994 ஆம் ஆண்டு தீர்ப்பு அளித்தது.

 Supreme Court Ayodhya verdict...no need to refer matter to larger bench

இந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கு விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது. அயோத்யா வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios