நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்கு விசாரணைகளை நேரடி ஒளிபரப்பு செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்கு விசாரணைகளை நேரடி ஒளிபரப்பு செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்கு விசாரணைகளின்போது, என்னென்ன பேசிக் கொள்கிறார்கள், என்ன உத்தரவு போடப்படுகிறது என்பதை நேரடியாக நாம் பார்க்க முடியாது. 

நீதிபதின் கருத்துக்கள், விசாரணையின்போது பேசப்பட்டவைகள் அனைத்தும் நீதிமன்றத்தில் இருப்பவர் மூலமே வெளியாட்களுக்கு தெரியவரும். எனவே, நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்கு விசாரணைகளை நேரடி ஒளிபரப்பு செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. 

இந்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு விசாரித்தது. விசாரணையின் முடிவில், நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்கு விசாரணைகளை, நேரடி ஒளிபரப்பு செய்யலாம் ஒன்று உத்தரவிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் நடைபெறும் அனைத்து வழக்குகளையும் நேரடி ஒளிபரப்பு செய்யலாம் என்று நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு அனுமதி அளித்துள்ளது. மேலும், நேரடி ஒளிபரப்பிற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.