கர்நாடக அரசு தேர்வு: அனுமதிச் சீட்டில் தேர்வு எழுதுவோர் புகைப்படத்துக்கு பதிலாக சன்னி லியோன் படம்

கர்நாடகாவில் நடந்த ஆசிரியர் தேர்வில் தேர்வாளரின் ஹால்டிக்கெட்டில் அவரின் புகைப்படத்துக்குப் பதிலாக நடிகை சன்னி லியோனின் புகைப்படம் வைக்கப்பட்டிருந்தது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

Sunny Leone's photograph was found on the hall ticket of a Karnataka government test,

கர்நாடகாவில் நடந்த ஆசிரியர் தேர்வில் தேர்வாளரின் ஹால்டிக்கெட்டில் அவரின் புகைப்படத்துக்குப் பதிலாக நடிகை சன்னி லியோனின் புகைப்படம் வைக்கப்பட்டிருந்தது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த அனுமதிச்சீட்டை சமூக வலைத்தளத்தில் அந்த பெண் பகிர்ந்துள்ளார். இதையடுத்து, விசாரணை நடத்த கர்நாடக கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

வரலாற்றில் முதல்முறை! இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் விரைவில் விண்ணில் பாய்கிறது: எப்போது?

கர்நாடக காங்கிரஸ் கட்சியின் சமூகவலைத்தளத் தலைவர் பிஆர் நாயுடு பதிவிட்ட கருத்தில் “ கர்நாடக ஆசிரியர் தேர்வில் தேர்வாளரின் புகைப்படத்துக்குப் பதிலாக, கர்நாடக கல்வித்துறை, பாலியல் நடிகை சன்னி லியோனின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளது. சட்டப்பேரவையில் பாலியல் வீடியோக்களைப் பார்த்தவர்களை வைத்துள்ளவர்களை கட்சியிடம் இருந்து நாம் என்ன எதிர்பார்க்க முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.

 

காங்கிரஸ் தலைவர் நாயுடு குற்றச்சாட்டு பாஜக தரப்பில் பதிலடி தரப்பட்டுள்ளது. பி.சி. நாகேஷ் வெளியிட்ட அறிக்கையில் “ தேர்வு எழுதிய பெண் தன்னுடைய புகைப்படத்தை பதிவேற்றம் செய்துள்ளார். ஆனால், கணினிமுறை அந்தப்புகைப்படத்தை எடுக்காமல் வேறு படத்தை எடுத்துக்கொண்டது.

ஜி-20 மாநாடு: உலகத் தலைவர்களுக்கு பிரதமர் மோடி பரிசாக வழங்க உள்ள பொருட்கள் என்ன?

நாங்கள் இது தொடர்பாக தேர்வு எழுதிய பெண்ணிடம் சன்னிலியோன் புகைப்படத்தை பதிவேற்றம் செய்தீர்களா என்று கேட்டபோது, தன்னுடைய விவரங்களை தன்னுடைய கணவரின் நண்பர் பதிவேற்றம் செய்ததாகத் தெரிவித்தார். இதுகுறித்து கர்நாடக கல்வித்துறை அளித்த புகாரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்” எனத் தெரிவித்தார்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios