நாளை முதல் மே மாதம் வரை வழக்கத்தை காட்டிலும் கோடை வெப்பம் கடுமையாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

பிப்ரவரி மாதம் முடிவடையவுள்ள நிலையில் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் இப்போதே அதிகரித்து காணப்படுகிறது. பகலில் கடும் வெயிலும் இரவு நேரங்களில் குளிரும் நிலவுகிறது. தற்போதுள்ள வெப்பத்தின் தாக்கத்தை பார்த்தால் இனி வரும் மாதங்களில் மிக கடுமையாக இருக்கும் என பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். 

இதையும் படிங்க;- கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த மருமகள்... நேரில் பார்த்த மாமியார்.. இறுதியில் நேர்ந்த கொடூரம்..!

இந்நிலையில், கோடை வெயில் தொடர்பாக இந்திய வானிலை மையம் கூறுகையில்;- நாளை முதல் மே மாதம் வரை வழக்கத்தை காட்டிலும் கோடை வெப்பம் கடுமையாக இருக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது. கோடை காலம் தொடங்கும் முன்பாகவே, நாடு முழுவதும் பல மாநிலங்களில் இப்போதே வெயில் கொளுத்த தொடங்கி விட்டது. குளுகுளு மாநிலமாக கருதப்படும் கேரளாவில் கடந்த மாதமே 33 டிகிரி செல்சியசுக்கு மேல் வெயில் அடிக்கத் தொடங்கி விட்டது. அது, அங்குள்ள மக்களை பாடாய்படுத்திக் கொண்டிருக்கிறது. 

இதையும் படிங்க;- இறுதிக்காலம் வரை குடிசை வீட்டில் வாழ்ந்த காத்தவராயன்... திமுகவில் இப்படியொரு எம்.எல்.ஏ.வா..?

மேலும், இமாச்சலபிரதேசம், உத்தரகாண்ட், ராஜஸ்தான், அருணாசலபிரதேசம் ஆகிய மாநிலங்களில் வழக்கமான வெப்பநிலை காணப்படும். வடகிழக்கு, மேற்கு, மத்திய இந்தியாவிலும், சில தென்பகுதிகளிலும் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். வழக்கமாக அடிக்கும் வெயிலைவிட கூடுதலாக ஒரு டிகிரி செல்சியஸ் வெப்பம் வரை அதிகரிக்கும்.மேலும், தமிழகத்தில் சென்னை, வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்ளிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்.

தென் இந்தியாவில் ஆந்திராவின் கடலோர மாவட்டங்கள், தெலுங்கானாவின் சில பகுதிகளில் வெப்பம் மிகவும் அதிகமாக இருக்கும். மற்ற பகுதிகளிலும் வழக்கத்தைவிட வெப்பம் அதிகமாக இருக்கும். மார்ச் முதல் மே மாதம் வரை இந்த வெப்பம் நீடிக்கும். ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்கும் இந்த ஆண்டு பருவ மழை வழக்கம் போல் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.