Wayanadu Landslide|அண்ணன், அண்ணி, அத்தை மாமா என மொத்தம் 26 குடும்ப உறுப்பினர்களை பறிகொடுத்த சுல்தான்!
வயநாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 250க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். நூற்றுக்கணக்கானோர் மாயமாகியுள்ளனர். காயமடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறன்றனர். காணாமல் போனவர்கள் உயிருடன் கிடைப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் மீட்பு பணிகள் தொடர்ந்து வருகின்றன.
கேரளாவின் மேப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியின் 7-ஏ வகுப்பறைக்கு வெளியே, சோகமே உருவான நிலையில் ஒருவர் காணப்பட்டார். அவர் ஒரு வேட்டி, சட்டை மற்றும் பழுப்பு நிற சால்வை அணிந்திருந்தார். அவர் தான் 47 வயதான சுல்தான். தினசரி கூலித்தொழிலாளியான் சுல்தான் இருநாட்கள் கண்ணில் தூக்கமின்றிம், தன் குடும்பத்தைய தேடியும் அழுதுகொண்டே கூறத் தொடங்குகிறார்...
இப்போதுதான் வகுப்பறைக்குள் சென்று பார்த்துவிட்டு வருகிறேன் இது என் இளைய சகோதரர் அப்சல் என்பவருடையது. செவ்வாய் கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் என் குடும்பத்தைச் சேர்ந்த 26 பேரும் சிக்கிக்கொண்டனர். இதுவரையில் 10 பேர் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பொத்தகல்லு அருகே உள்ள சாலியாற்றில் இருந்து அப்சல் உடலை என் மக்கள் மீட்டு கொடுத்தனர். மொத்தம் 10 உடல்கள் கிடைத்துள்ளன. இன்னும் 16 பேர் நான் எங்கே சென்று தேடுவேன் என கனத்த குரலில் கூறினார்.
சுல்தானைப் போலவே உயிர் பிழைத்த பலர், தங்கள் குடும்பங்களைத் தேடி இரண்டு நாட்களாக அழைந்துகொண்டிருக்கின்றனர். ஆயினும், சுல்தானின் தனிப்பட்ட சோகத்தின் எண்ணிக்கையும் அளவும் மிகவும் அதிகமானது தான். இறந்தவர் யார், காணாமல் போனவர் யார் என்பதை கூட நினைவில் கொள்வதில் சுல்தானுக்கு சிரமம் உள்ளது.
திங்கட்கிழமை காலை தொடர் மழை பெய்து கொண்டிருந்ததால், சுல்தானுக்கு ஏதோ தவறு இருப்பதாக படவே, இனி இந்த கிராமம் பாதுகாப்பானது இல்லை எனக் கருதி மனைவி மற்றும் மூன்று குழந்தைகளிடம் கொஞ்சம் துணிகளை எடுத்து வரச் சொல்லிவிட்டு ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார்.
மேலும், பக்கத்து வீட்டில் வசிக்கும் அண்ணன் அப்சல் மற்றும் அவரது குடும்பத்தினரையும் இடம் மாற கூறியுள்ளார். அவர்கள் அடுத்த கிராமமான சூரல்மலைக்கு இடம்பெயர்ந்துள்ளனர். ஆனால், இயற்கை விட்டபாடில்லை. மேப்பட்டி, சூரல்மலை மற்றும் முண்டக்கை ஆகிய 3 கிராமங்களும் நிலச்சரிவில் சிக்கி புதைந்தது.
வயநாடு நிலச்சரிவு: பெய்லி பாலத்தில் போக்குவரத்து தொடங்கியது! முண்டக்கையில் மீட்புப் பணிகள் தீவிரம்!
இன்னும் கண்டுபிடிக்கப்படாத இறந்தவர்களில் வயதான உறவினர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் - அத்தைகள், மாமாக்கள் மற்றும் உறவினர்கள் - அவர்களில் ஒரு வயது குழந்தை ஒன்றும் உள்ளதாக சுல்தான் கூறினார்.
திங்கட்கிழமையே தொடர் மழையின் போது, எங்கள் உள்ளூர் வார்டு உறுப்பினரிடம், அனைவரையும் இடமாற்றம் செய்யச் சொன்னேன். ஆனால், அவர் காதில் வாங்கவில்லை. 'நீங்கள் செல்ல விரும்பினால், செல்லலாம்' என்றார். திங்கள்கிழமை மாலைக்குள் அவர்கள் இரு கிராமங்களிலிருந்தும் அனைவரையும் வெளியேற்றியிருந்தால், அது இவ்வளவு பெரிய இழப்புகளை தவிர்த்திருகலாம் என்றார்.