சுலப் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் நிறுவனரும், பிரபல சமூக ஆர்வலருமான பிந்தேஷ்வர் பதக், தில்லியில் உள்ள மருத்துவமனையில் மாரடைப்பு காரணமாக இன்று செவ்வாய்க்கிழமை காலை அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலமானார் அவருக்கு வயது 80.
இன்று காலை சுதந்திர தின கொண்டாட்டம் ஒன்றில் கலந்துகொண்ட அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. உடனே அவர் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்திற்கு (எய்ம்ஸ்) கொண்டு செல்லப்பட்டார் என்று சுலப் இன்டர்நேஷனல் இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சுலப் இன்டர்நேஷனலின் நிறுவனராக, பதக் மனித உரிமைகள், சுற்றுச்சூழல் சுகாதாரம், மரபுசாரா எரிசக்தி ஆதாரங்கள் மற்றும் கல்வி மூலம் கழிவு மேலாண்மை ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Xல் (ட்விட்டர் பக்கத்தில்), பிரதமர் நரேந்திர மோடி பதக்கின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது தேசத்திற்கு "மிகப்பெரிய இழப்பு" என்று அவர் கூறினார். "சமூக முன்னேற்றத்திற்காகவும், தாழ்த்தப்பட்டவர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காகவும் தொலைக்நோக்கு சிந்தனையோடு பாடுபட்டவர்" பதக் பாடுபட்டதற்காக அவர் பாராட்டினார்.
வீடுதோறும் பறக்கும் மூவர்ணக் கொடி! இணையத்தில் இதுவரை 88 மில்லியன் செல்ஃபிகள் பதிவு!
பிந்தேஷ்வர் பதக்குடனான தனது உரையாடலின் போது, பிந்தேஷ்வர் பதக்கின் "ஸ்வச்சதா மீதான ஆர்வம் எப்போதும் வெளிப்படும்" என்று பிரதமர் கூறினார். பிந்தேஷ்வர் பதக் 1970ல் பீகாரில் இருந்து சுலப் சர்வதேச சமூக சேவை அமைப்பை நிறுவினார்.
அன்றிலிருந்து, குடிசைப்பகுதிகள், கிராமப்புறங்கள் மற்றும் நகரங்களில் உள்ள மக்கள் பழைய, சுகாதாரமற்ற கழிவறைப் பழக்கங்களை மாற்றுவதற்கு பதக் கடுமையாக பணியாற்றி வந்தார். அவர் மலிவு விலையில் கழிப்பறை அமைப்புகளை உருவாக்கினார், அது மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கையை சிறப்பாகவும் ஆரோக்கியமாகவும் மாற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் கழிவறைகளில் இருந்து மனிதக் கழிவுகளை, கையால் சுத்தம் செய்யும் நடைமுறையை முடிவுக்குக் கொண்டுவர அவர் பெரும் முயற்சி மேற்கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. பதக்கின் சுகாதாரத்திற்கான புதுமையான அணுகுமுறை, 1749 நகரங்களில் உலர் கழிப்பறைகளை இரண்டு குழிகளைக் கொண்ட கழிவறைகளாக மாற்றுவதற்கும், 160,835 கழிப்பறைகளைக் கட்டுவதற்கும் வழிவகுத்தது நினைவுகூரத்தக்கது.
பதக் அவர்கள், இந்தியாவின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷன் விருது பெற்றவர். மேலும் கடந்த 2003ல், அவர் குளோபல் 500 ரோல் ஆஃப் ஹானரில் சேர்க்கப்பட்டார், மேலும் 2009ல், அவருக்கு மதிப்புமிக்க ஸ்டாக்ஹோம் நீர் பரிசு வழங்கப்பட்டது. சிறந்த நடைமுறைகளுக்கான துபாய் சர்வதேச விருது மற்றும் பாரிஸில் உள்ள பிரெஞ்சு செனட்டின் லெஜண்ட் ஆஃப் பிளானட் விருது ஆகிய விருதுகளையும் அவர் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
2020ல், ஒரு சமூகப் புதுமைப்பித்தனாக அவர் ஆற்றிய பணியை விவரிக்கும் புத்தகம், 'நமஸ்தே, பிந்தேஷ்வர் பதக்!' வெளியிடப்பட்டது. 2016 ஆம் ஆண்டில், நியூயார்க் நகரின் மேயர் பில் டி பிளாசியோ, ஏப்ரல் 14ம் தேதியை பிந்தேஷ்வர் பதக் தினமாக அறிவித்தார் என்பது நினைவுகூரத்தக்கது.
நாங்களும் கொண்டாட்டத்தில் இணைகிறோம்! இந்தியாவுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் சுதந்திர தின வாழ்த்து
