வீடுதோறும் பறக்கும் மூவர்ணக் கொடி! இணையத்தில் இதுவரை 88 மில்லியன் செல்ஃபிகள் பதிவு!

கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் நாடு முழுவதும் இருந்து 88 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தேசியக் கொடியுடன் செல்ஃபி எடுத்து பதிவேற்றியுள்ளனர்.

88 million selfies uploaded on Govt's Har Ghar Tiranga website till noon on I-Day

சுதந்திர தினத்தில் கொடியேற்றி செல்ஃபி எடுத்து கொண்டாட பிரதமர் மோடி அழைப்பு விடுத்ததை அடுத்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் நாடு முழுவதும் இருந்து 88 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தேசியக் கொடியுடன் செல்ஃபி எடுத்து மத்திய அரசின் ஹர் கர் திரங்கா (எல்லா வீட்டிலும் மூவர்ணக் கொடி) இணையதளத்தில் பதிவேற்றியுள்ளனர். இந்த எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை மதியம் 12 மணி வரை பதிவேற்றம் செய்யப்பட்ட செல்ஃபிகளின் எண்ணிக்கை ஆகும்.

ஹர் கர் திரங்கா (Har Ghar Tiranga) இணையதளத்தின் முகப்புப் பக்கத்தில், கொடியுடன் ஒரு செல்ஃபியைப் பதிவேற்றுவதற்கான வசதி உள்ளது. செவ்வாய்கிழமை நண்பகல் 12 மணி வரை 8,81,21,591 (88 மில்லியன்) மூவர்ணக் கொடியுடன் கூடிய செல்ஃபிகள் பதிவேற்றப்பட்டுள்ளன.

இதெல்லாம் வெளிநாட்டு கம்பெனின்னு நெனைச்சீங்களா! ஆச்சரியப்பட வைக்கும் 10 இந்திய நிறுவனங்கள்!

77வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் ஆகஸ்ட் 13 முதல் 15 வரை மூன்று நாள் 'ஹர் கர் திரங்கா' இயக்கம் நடைபெறுகிறது. இந்த இயக்கத்தின் கீழ் பொதுமக்கள் தங்கள் வீட்டில் தேசியக் கொடியை ஏற்றி கொடியுடன் செல்ஃபி எடுத்து பதிவேற்ற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

டிஜிட்டல் திரங்கா என்ற பட்டனும் ஹர் கர் திரங்கா இணையதளத்தின் முகப்புப் பக்கத்தில் உள்ளது. அதை கிளிக் செய்தால் இதுவரை பதிவேற்றப்பட்ட செல்ஃபிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட மூவர்ணக் கொடி திரையில் தோன்றுகிறது. கீழே ஸ்க்ரோல் செய்தால், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, முன்னாள் கிரிக்கெட் வீரர் பார்த்தீவ் படேல், நடிகர் அனுபம் கேர் மற்றும் பாடகர் கைலாஷ் கெர் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், நடிகர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் இந்திய தேசியக் கொடியான மூவர்ணக் கொடியுடன் எடுத்த செல்ஃபிகளைப் பார்க்கலாம்.

இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் 'ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்' விழாவில், 'ஹர் கர் திரங்கா' என்ற இயக்கத்தை பிரதமர் மோடி கடந்த ஆண்டு ஜூலை 22ஆம் தேதி தொடங்கினார். ஞாயிற்றுக்கிழமை, 'ஹர் கர் திரங்கா' இயக்கத்தை மூன்று நாட்களை கடைபிடிக்க பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். சமூக ஊடக கணக்குகளில் முகப்புப் படத்தை மூவர்ணக் கொடியை வைக்கவும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

பிரதமர் மோடியின் 3D பேச்சு! சுதந்திர தின உரையை புகழ்ந்து தள்ளிய பிரபலங்கள்!

இந்த இயக்கத்தை ஊக்குவிக்கும் வகையில், பிரதமர் மோடியும் தனது சமூக வலைத்தள கணக்குகளின் முகப்புப் படத்தை மாற்றி தேசிய கொடியை வைத்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் நடந்த 'ஹர் கர் திரங்கா' பைக் பேரணியில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர். பேரணியை துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தங்கர் கொடியசைத்துத் தொடங்கிவைத்தார். இந்தக் கொடி ஊர்வலம் மதுரா சாலை, பைரோன் சாலை, இந்தியா கேட், பிரகதி மைதான சுரங்கப்பாதை வழியாகச் சென்றது.

முன்னதாக, கிஷன் ரெட்டியுடன் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் இந்தியக் கொடியை கையில் பிடித்தபடி பைக்கில் பயணிக்கும் காட்சியின் வீடியோ சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டது. இந்த கொடி ஊர்வலத்தின் போது 'பாரத் மாதா கி ஜெய்' கோஷங்கள் எழுப்பப்பட்டன. கர்நாடகாவை சேர்ந்த மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜேவும் பைக் பேரணியில் பங்கேற்றார்.

செவ்வாய்க்கிழமை காலை டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றிவைத்து, பல்வேறு பிரமுகர்கள், அமைச்சர்கள் மற்றும் பள்ளிக் குழந்தைகள் உள்ளிட்டோர் முன்னிலையில் நாட்டு மக்களுக்கு சுதந்திர தின உரையாற்றினார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios