sudden change in talaq case

முத்தலாக் விவாகரத்து வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு உச்சநீதிமன்றம் மாற்றியுள்ளது.

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த இஸ்லாமியப் பெண் ஒருவரே இவ்வழக்கின் மூல காரணம். இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில் தனது கணவர் செல்போன் மூலம் ஒரே மூச்சில் முத்தலாக் கூறி விவகாரத்து செய்து விட்டதாகவும், இதனை உச்சநீதிமன்றம் ஏற்கக் கூடாது என்றும் தெரிவித்திருந்தார். 

மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசும் முத்தலாக் முறை இஸ்லாமிய பெண்களின் உரிமையை பறிப்பதாகக் கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ஆனால் இதனை ஏற்காத இஸ்லாமிய அமைப்புகள் மத்திய அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தின.

இஸ்லாமியர்களின் தனிச்சட்டத்தில் அரசு தலையிடுவதாக பரவான குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. அப்போது இவ்வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.