"அம்மானா சும்மா இல்லடா சாமி .. என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப, ஒரு தாய் இல்லை என்றால் பெற்ற பிள்ளைகளை இந்த சமுதாயத்தில் உயர்த்துவது என்பது எவ்வளவு பெரிய விஷயம்.

அப்படி ஒரு அழகிய சம்பவம் நடந்துள்ளது கர்நாடக மாநிலத்தில், கணவரை இழந்த தாய் தனி ஒரு பெண்ணாய் வயலில் வேலை செய்து, தினம் தினம் கிடைக்கும் பணத்தை வைத்து தன் மகனை படிக்க வைத்து உள்ளார். இன்று அவருடைய மகன் இன்று சப் இன்ஸ்பெக்டர்.

சப் இன்ஸ்பெக்டராக தேர்வான அவர், பாசிங் அவுட் பாரடே முடிந்த உடன், யூனிபார்ம் அணிந்தே ஓடோடி  வந்து, வயலில் வேலை செய்து வந்த தன் தாயின் காலில் விழுந்து வணங்கினார்.

 

இது குறித்த இந்த போட்டோ தான் தற்போது சமூக வலைத்தளத்தில் இளைஞர்கள் மத்தியில் பிரபலம்.மேலும் இந்த அற்புத சம்பவத்தையும், தாய்க்கும் மகனுக்கும் இடையே நடக்கும் பந்தம் பற்றியும் கர்நாடக மாநில ஆயுதப்படை கூடுதல் டிஜிபி பாஸ்கரராவ் இந்த புகைப்படத்தை பதிவிட்டு விளக்கி உள்ளார்

இந்த போட்டோவிற்கு மக்கள் மத்தியில் அதிக லைக்ஸ் கிடைத்துள்ளது. மற்றும் பெரும்பாலோனர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.