உக்ரைனில் இருந்து வந்த மாணவர்கள் இந்தியாவில் மருத்துவ கல்வி தொடர முடியாது... மத்திய அரசு அதிர்ச்சி.
வெளிநாடுகளில் மருத்துவம் படித்து பாதியில் திரும்பிய மாணவர்கள் இந்தியாவில் உள்ள கல்லூரிகளில் படிக்க இடம் வழங்க விதிகளில் இடமில்லை என மத்திய அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
வெளிநாடுகளில் மருத்துவம் படித்து பாதியில் திரும்பிய மாணவர்கள் இந்தியாவில் உள்ள கல்லூரிகளில் படிக்க இடம் வழங்க விதிகளில் இடமில்லை என மத்திய அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். ஆனால் அவர்கள் வெளிநாடுகளில் கல்வி தொடர நடவடிக்கைகளே எடுத்து வருவதாகவும் மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் மருத்துவம் உள்ளிட்ட உயர் கல்விகளில் இடம் கிடைக்காத மாணவர்கள் வெளிநாடுகளில் மருத்துவம் பயின்று வருகின்றனர், அதில் உக்ரைன் ரஷ்யா, பிலிப்பைன்ஸ், சீனா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு மாணவர்கள் பட்டமேற்படிப்பு காக செல்கின்றனர். அந்த வகையில் உக்ரைனில் ஏராளமான மாணவர்கள் தங்கி பயின்று வந்தனர். இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைன் ரஷ்யா இடையே போர் வெடித்தது, இந்நிலையில் அங்கு படித்து வந்த 20 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் தங்களது படிப்பை பாதியில் கைவிட்டு நாடு திரும்பினர்.
இதையும் படியுங்கள்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு இரவு விருந்து அளித்த பிரதமர்..! யாரெல்லாம் பங்கேற்றார்கள் தெரியுமா?
அங்கி ஒரு சில மாணவர்கள் உயிரிழந்தனர். உயிர் பிழைத்து வந்த மாணவர்கள் பாதியில் கைவிடப்பட்ட படிப்பை இந்தியாவில் தொடர அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என தொடர்ந்து மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி வருகின்றனர், குறிப்பாக தமிழக அரசு அயல்நாட்டில் இருந்து திரும்பிய மாணவர்கள் நாட்டிலேயே மருத்துவம் பயில முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் உறுதி அளித்துள்ளது. இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து திரும்பிய மாணவர்கள் நாட்டிலேயே கல்வி தொடர வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என மாணவர்கள் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படியுங்கள்: மேற்கு வங்க அமைச்சரின் உதவியாளர் வீட்டில் சோதனை... ரூ.20 கோடி ரொக்கம், செல்போன்கள் பறிமுதல்!!
இந்த விவகாரத்தில் மத்திய அரசும் மௌனமாகவே இருந்து வந்தது, இந்நிலையில் நேற்று நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது மக்களவை உறுப்பினர் கவிதா மலோத் உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களை கல்லூரியில் சேர்க்கும் மாநில அரசின் முடிவுக்கு ஏன் தேசிய மருத்துவ ஆணையம் ஒப்புதல் வழங்கவில்லை என்றும்? நாடு திரும்பிய மாணவர்களை கல்லூரிகளில் சேர்ப்பதற்கு மத்திய அரசிடம் ஏதேனும் இருக்கிறதா என கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய சுகாதார இணை அமைச்சர் பாரதி பிரவீன் அவர் தனது பதிலை எழுத்துப்பூர்வமாக அளித்துள்ளார். அதில்,
போரினால் பாதிக்கப்பட்டு உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களை இந்தியாவில் உள்ள கல்லூரிகளில் சேர்ப்பதற்கான வாய்ப்பு இல்லை, அவர்களை இந்திய மருத்துவ கல்லூரியில் சேர்ப்பதற்கு விதிகளில் இடமில்லை, இதில் உக்ரைன் மட்டுமல்ல எந்த வெளிநாடுகளிலிருந்து வரும் மாணவர்களும் இந்தியாவில் சேர முடியாது. வெளிநாடுகளில் இருந்து திரும்பிய மாணவர்களை இந்திய மருத்துவக் கல்லூரிகளில் சேர்ப்பதற்கான முடிவுக்கு தேசிய மருத்துவ ஆணையம் ஒப்புதல் அளிக்கவில்லை, அதே நேரத்தில் இந்தியா மாணவர்கள் வெளிநாடுகளில் உள்ள பிற கல்லூரிகளில் தங்களது படிப்பை தொடர தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது என்றும் அவர் அதில் கூறியுள்ளார்.