students kept money in answer sheets in up

விடைத்தாளில் ரூபாய் நோட்டுகள்....ஆசிரியர்களுக்கு லஞ்சம்.

உத்தரப்பிரதேசத்தில் தற்போது 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைப்பெற்று வருகிறது.

இந்த தேர்வை எழுதிய மாணவர்களில் சிலர் விடைத்தாளின் நடுவில் ரூபாய் தாளை லஞ்சமாக வைத்துள்ளனர்

பெரோசாபாத் (Firozabad) பகுதியில் உள்ள பள்ளியில் தேர்வு முடிந்தவுடன் அந்த விடைத்தாளை கண்காணிப்பாளர்கள் சரிபார்க்கும் போது அதற்குள் 50,100 மற்றும் 500 ரூபாய் தாள்கள் இருந்துள்ளது.

இதுதொடர்பாக ஆசிரியர்கள் கூறுகையில், மாணவர்கள் ரூபாய் நோட்டுகளை விடைத்தாளில் வைத்து லஞ்சமாக அனுப்புகின்றனர்.

ஆனால் இதையெல்லாம் பெற்றுக்கொண்டு மதிப்பெண்கள் வழங்குவதில்லை. விடைத்தாளில் அவர்கள் எழுதியிருக்கும் விடையை மதிப்பீடு செய்து மதிப்பெண்கள் வழங்குகிறோம்.

எந்த ஆசிரியரும் விடைத்தாளில் இருக்கும் ரூபாய் நோட்டுகளை ஏற்றுக்கொள்வதில்லை என்றனர்.கேள்விக்கு விடைதெரியாமல், மாணவர்கள் அளிக்கும் பதில் பல விதங்களில் குறும்புத்தனமாக சில சமயங்களில் இருக்கும்.

ஆனால் தற்போது,எப்படியோ பாஸ் ஆக வேண்டும் என்பதற்காக பணத்தையே விடைத்தாளில் வைத்து அனுப்புகின்றனர்

லஞ்சம் இருக்கவே கூடாது லஞ்சத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என என்னதான் கூவினாலும்,மாணவ பருவத்தியே லஞ்சம் கொடுப்பது தொடங்கிவிட்டது