பெங்களூருவில் உள்ள காடுகொண்டனஹள்ளியில் பெங்களூரு தமிழ்சங்கத்தின் காமராஜர் உயர்நிலைப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. தமிழ்ச்வழிப் பள்ளியான இதில் பெரும்பாலும் தமிழகத்தைச் சேர்ந்த ஏழை தொழிலாளர்களின் குழந்தைகள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளியின் தலைமை ஆசிரியை ராஜேஸ்வரி தலித் மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்யுமாறு கூறியுள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்த மாணவன் ஒருவரை தாக்கியதில் அவரது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அடிப்பட்ட மாணவனுக்கு தொடர்ந்து அரசு மருத்துவமனையில் கிசிச்சை அளிக்கப்பட்டது.
இதையடுத்து மாணவரின் பெற்றோர் காடுகொண்டனஹள்ளி காவல் நிலையத்தில் தலைமை ஆசிரியை ராஜேஸ்வரி, ஊழியர் மூர்த்திக்கு எதிராக புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் போலீஸார் இருவர் மீதும் எஸ்சி, எஸ்டி வன்கொடுமைகள் தடுப்பு சட்டம், சிறார் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம், இந்திய தண்டனைச் சட்ட பிரிவு 34,323,324 ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்தனர். மேலும் தலைமறைவான இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.