Asianet News TamilAsianet News Tamil

மீண்டும் டெல்லியை உலுக்கிய நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.2 ஆகப் பதிவு

டெல்லி, உத்தரப் பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட வட மாநிலங்களில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Strong Tremors In Delhi After 5.2 Magnitude Earthquake In Nepal sgb
Author
First Published Nov 6, 2023, 4:34 PM IST | Last Updated Nov 6, 2023, 5:11 PM IST

டெல்லி, உத்தரப் பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட வட மாநிலங்களில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.2 புள்ளிகள் வரை பதிவாகியுள்ளது. 5 முதல் 10 நொடிகள் வரை தொடர்ந்து நில அதிர்வு உணரப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இது தலைநகர் டெல்லியில் மூன்று நாட்களில் ஏற்பட்ட இரண்டாவது நிலநடுக்கம் ஆகும். இந்த நிலநடுக்கம் உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்து 233 கி.மீ. வடக்கே தொலைவில் மையம் கொண்டிருந்தது என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

டெல்லி காற்று மாசுபாடு: முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உயர்மட்ட ஆலோசனை கூட்டம்!

அடுத்தடுத்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டிருப்பது டெல்லி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மேசைகள் மற்றும் தளவாடப் பொருட்கள் வலுவாகக் குலுங்கியதாக பொதுமக்கள் பலர் கூறுகின்றனர்.

கடந்த நவம்பர் 3ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நேபாளத்தில் 6.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பின், இன்று (திங்கள்கிழமை) பிற்பகலிலும் 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் எதிரொலியாக டெல்லி மற்றும் அருகிலுள்ள நகரங்களில் இன்று வலுவான நில நடுக்கம் உணரப்பட்டிருக்கிறது.

பிக்பாஸ் 7: பூர்ணிமாவுக்கு மமதை வந்துருச்சா? இது அதிகார துஷ்பிரயோகம்... கமல் பேசிய பதவி அரசியல்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios