உத்தரப்பிரதேசத்தில் புதிதாக ஆட்சியில் அமர்ந்துள்ள பா.ஜனதா அரசின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் ஆளுநர் உரையின் போது எதிர்க்கட்சிகள் கூச்சலிட்டும், விசிலடித்தும், பேப்பரை பந்துபோல உருட்டி எறிந்தும் பெரும் ரகளையில் ஈடுபட்டனர்.

முதல் கூட்டத்தொடர்

உத்தரப்பிரதேசத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜனதா அரசு அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. மார்ச் மாதம் புதிய அரசு பதவி ஏற்றபின், முதல் முறையாக ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவைக் கூட்டம் நேற்று தொடங்கியது.

ஆளுநர் உரை

இதற்காக சட்டப்பேரவையின் மேலவை, கீழ் அவை என இரு அவைகளையும் ஒன்றாக கூட்டி, ஆளுநர் ராம் நாயக் நேற்று உரையாற்றி கூட்டத்தொடரை தொடங்கி வைத்தார்.

ஆனால், தொடக்கத்தில் இருந்தே எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ்  கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கடும் கூச்சலில் ஈடுபட்டனர்.

விசில் சத்தம்

ஆளுநர் ராம்நாயக் பேசத் தொடங்கி 35-வது நிமிடத்தில், சமாஜ்வாதி  எம்.எல்.ஏ. ராஜேஷ் யாதவ், திடீரென விசில் அடித்து, ஆளுநர் உரை தனகுக்கு கேட்கவில்லை சத்தமாக பேசவும் எனக் கூறினார். மேலும், சில உறுப்பினர்கள் காகிதத்தை பந்துபோல உருட்டி, ஆளுநர் ராம்நாயக் மீது எறிந்தனர். அதை அருகில் இருந்த பாதுகாவலர்கள் தடுத்தனர்.

பேனர்,பதாகைகள்

மேலும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேனர்கள், சிறிய பதாகைகள் உள்ளிட்டவற்றை ஏந்தி அவையின் மையப்பகுதிக்கு வந்து கூச்சலிட்டனர்.

பகுஜன் சமாஜ் கட்சி  உறுப்பினர்கள் வைத்திருந்த சிறிய பேனர்களில, “ யோகி ஆட்சியில் போலீஸ் மக்கலை அடிக்கிறார்கள், பசுபாதுகாப்பு என்ற பெயரில் குண்டர்கள் ஆட்சி நடக்கிறது’’ என்று எழுதி இருந்தது. சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என சமாஜ்வாதி உறுப்பினர்கள் கோஷமிட்டனர்.

இவர்களோடு காங்கிரஸ் உறுப்பனர்கள் சேர்ந்து கொண்டு, “ சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது. இறைச்சிக்கடைகளை மூடுதல், முத்தலாக் விஷயத்தில் அரசு தீவிரமாக இருக்கிறது’’ என கோஷமிட்டனர்.

பாராட்டு

அதேசமயம், ஆளுநர் ஆளும் அரசை புகழ்ந்து பேசிய போது, பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் மேஜையைத் தட்டி ஆதரவைத் தெரிவித்தனர்.

நேரடி ஒளிபரப்பு

மேலும், உத்தரப்பிரதேச வரலாற்றில் முதல்முறையாக சட்டசபை நடவடிக்கைகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதைக் குறிப்பிட்டுப் பேசிய ஆளுநர், “ உறுப்பினர்களின் நடவடிக்கையை ஒட்டுமொத்த மக்களும் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். அவையி் மான்பை பாதுகாக்க வேண்டும்’’ எனத் தெரிவித்தார். ஆனால், எதிர்க்கட்சயினர் தொடர்ந்து கூச்சலிட்டனர்.

அரசு தோல்வி

சமாஜ்வாதி கட்சியின் மூத் தலைவர் ராம் கோவிந்த் சவுத்ரி எழுந்து பேசுகையில், “ மாநிலத்தில் பலாத்காரம், கொலைகள் அதிகரித்துவிட்டது. குழந்தைகளை பலாத்காரம் செய்வதும் கூட பெருகிவிட்டது. ஒட்டுமொத்த அரசும் தோல்வி அடைந்துவிட்டது’’ என்றார்.

பேசவலி்லை

கூட்டத்தொடருக்கு சமாஜ்வாதி கட்சியின் தேசிய தலைவர் அகிலேஷ் யாதவ், அவரின் சித்தப்பா சிவபால் யாதவும் அவைக்கு வந்திருந்தனர். ஆனால், பழைய பகை காரணமாக, இருவரும் ஒருவொருக்கு ஒருவர் பேசிக்கொள்ளாமல் அமர்ந்திருந்தனர்.