Vande Bhart:4 நாள்ல வேலைய காட்டிட்டிங்களே! ஹவுரா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மீது கல்வீச்சு: கண்ணாடிகள் சேதம்

மேற்கு வங்கத்தில் ஹவுரா மற்றும் நியூ ஜல்பைகுரி இடையே இயக்கப்பட்ட வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயில் தொடங்கப்பட்டு 4 நாட்களுக்குள் அடையாளம் தெரியாத சிலர் கல்வீசி தாக்கியுள்ளனர். இதில் ரயிலின் பக்கவாட்டுக் கண்ணாடிகள் மோசமாகச் சேதமடைந்தன.

Stones pelted at Howrah-bound Vande Bharat Express train 4 days after launch

மேற்கு வங்கத்தில் ஹவுரா மற்றும் நியூ ஜல்பைகுரி இடையே இயக்கப்பட்ட வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயில் தொடங்கப்பட்டு 4 நாட்களுக்குள் அடையாளம் தெரியாத சிலர் கல்வீசி தாக்கியுள்ளனர். இதில் ரயிலின் பக்கவாட்டுக் கண்ணாடிகள் மோசமாகச் சேதமடைந்தன.

மேற்கு வங்க மாநிலம் ஹவுரா-நியூ ஜல்பைகுரி நகரங்களுக்கு இடையே வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி கடந்த டிசம்பர் 30ம் தேதி தொடங்கி வைத்தார்

கடந்த ஆண்டை விட இந்தாண்டு ரயில்வே வருவாய் 71% அதிகரிப்பு... மத்திய அரசு தகவல்!!

ஹவுரா நகரில் இருந்து ஜல்பைகுரி வரை இந்த வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் இந்த ரயில் 7.5 மணிநேரம் பயணித்து, மால்டா நகரம், பர்சோய், கிசான்கஞ்ச் நகரங்களைக் கடந்து ஜல்பைகுரி செல்லும். வாரத்தில் 6 நாட்கள் வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படும். 

 

ஹவுரா ரயில் நிலையத்திலிருந்து காலை 6மணிக்குப் புறப்படும் வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயில், நியூ ஜல்பைகுரிக்கு பிற்பகல் 1.30 மணிக்கு சென்றடையும். அங்கு ஒரு மணிநேரத்துக்குப்பின், பிற்பகல் 2.30 மணிக்குப் புறப்பட்டு, இரவு 10 மணிக்கு ஹவுரா வந்து சேரும்.

இந்நிலையில் வந்தேபாரத் ரயில் ஹவுராவில் இருந்து நியூ ஜல்பைகுரிக்கு இயக்கப்பட்ட 4 நாட்களுக்குள் சில அடையாளம் தெரியாத ஆசாமிகள் ரயில் மீது கல்வீசித் தாக்கியுள்ளனர். 

மால்டா அருகே, குமார்கஞ்ச் ரயில்நிலையம் அருகே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் வந்தபோது, சிலர் ரயில்மீது கல்வீசுயுள்ளனர். இதில் ரயிலின் பக்கவாட்டுக்கண்ணாடிகள் சேதமடைந்தன. பயணிகள் யாருக்கும் எந்தவிதமான சேதமும் இல்லை.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை சட்டவிரோதமானது: உச்ச நீதிமன்ற நீதிபதி நாகரத்னா மாறுபட்ட தீர்ப்பு

கிழக்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில் “ ஜனவரி 2ம் தேதி மாலை 5.50 மணி அளவில் பெறப்பட்டதகவலின்படி, வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மால்டாவின் குமார்கஞ்ச் ரயில்நிலையத்தைக் கடந்து செல்லும்போது, பெட்டி எண் 13-ன் மீது சில அடையாளம் தெரியாத நபர்கள் கல்வீசியுள்ளனர்.
இதில் பெட்டியின் பக்கவாட்டுக் கண்ணாடிகள் சேதமடைந்தன, உடனடியாக ரயிலின் பாதுகாவலர், உள்ளிட் 4 பேர் அந்த இடத்துக்கு சென்று பார்வையிட்டனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

தன்குனி பகுதியைச் சேர்ந்த பயணி ரிந்து கோஷ் கூறுகையில் “ ரயில்நிலையத்துக்கு அருகே இருந்துதான் சிலர் கற்களை வீசியிருக்க வேண்டும். இதைக் கேட்டதும் அதிர்ச்சியாக இருந்தது, கண்ணாடியும் உடைந்துவிட்டன. மால்டா ரயில்நிலையத்துக்கு அருகே வந்தபோதுதான் இந்த சம்பவம் நடந்தது. ஆனால், நல்வாய்ப்பாக பயணிகள் யாருக்கும் பாதிப்பில்லை. எதற்காக இந்த கற்களை எறிந்தார்கள் என்ற விவரம் தெரியவில்லை” எனத் தெரிவித்தார்

இந்த விவகாரம் தொடர்பாக ரயில்வே போலீஸார் வழக்குப்பதிவுசெய்து விசாரித்து வருகிறார்கள்.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios