கேரளாவில் வந்தேபாரத் ரயில் மீது கல் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் வந்தேபாரத் ரயில் மீது கல் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கியதில் இருந்தே பீகாரிலும் வங்காளத்திலும் கல் வீச்சு பற்றிய செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன. வேகமாக செல்லும் ரயிலின் கண்ணாடி மீது கற்கள் வீசப்படும் சம்பவங்கள் தொடர்ந்து பதிவாகி வருகின்றன. இந்த தாக்குதலில் ரயிலின் கண்ணாடிகள் உடைந்த சம்பவங்களும் ஏராளம்.
இதையும் படிங்க: அடுத்த 2 நாட்களுக்கு கனமழை தொடரும்.. எந்தெந்த பகுதிகளில் தெரியுமா..?
இந்த நிலையில் கேரளாவில் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கிய சில நாட்களிலேயே கல் வீச்சு சம்பவம் நடந்துள்ளது. ரயில் திரூர் நிலையத்தில் இருந்து புறப்பட்டு திருன்னாவாய ரயில் நிலையத்தை வந்தடையும் முன் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த திடீர் தாக்குதலில் ரயிலின் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: உடைந்த ரயில் இருக்கை கைப்பிடியின் புகைப்படத்தை பதிவிட்ட நபர்.. இந்திய ரயில்வே சொன்ன பதில்..
ஆனால், ஷோர்னூரில் ரயிலில் முதற்கட்ட ஆய்வு நடத்திய பிறகு, பெரிய அளவில் எதுவும் இல்லை என்றும், சிறிய விரிசல் மட்டுமே இருப்பதாகவும் ரயில்வே தெரிவித்துள்ளது. இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏப்ரல் 25 ஆம் தேதி திருவனந்தபுரம் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பிரதமர் மோடி பச்சைக் கொடியை அசைத்து வந்தே பாரத் ரயில் பயணத்தை தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
