Asianet News TamilAsianet News Tamil

இந்தியாவில் 93 சதவீத கற்பழிப்புகள் இவங்களாலால தான் நடக்குதாம் !! தேசிய குற்ற ஆவண காப்பகம் அதிர்ச்சி தகவல் !!

இந்தியாவில் 93% கற்பழிப்புகள் பாதிக்கப்பட்டவருக்குத் தெரிந்த நபர்களால் நடைபெறுகின்றன என தேசிய குற்ற ஆவண காப்பகம் அறிக்கை தெரிவிக்கிறது.
 

statistics about rape
Author
Delhi, First Published Oct 22, 2019, 8:10 PM IST

2017ம் ஆண்டில் பதிவான குற்ற வழக்குகள் தொடர்பாக தேசிய குற்ற ஆவண காப்பகம் அறிக்கை  ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள தகவல்கள் அதிர்ச்சிகரமானவைகளாக உள்ளன.

தேசிய குற்ற ஆவண காப்பகம் அறிக்கையின் படி  இந்தியாவில் நடைபெற்ற 30,299 கற்பழிப்பு வழக்குகளில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் 3,155 பேர் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். 16,591 கற்பழிப்பு வழக்குகளில் குடும்ப நண்பர்கள், முதலாளிகள், அயலவர்கள் அல்லது அறியப்பட்ட பிற நபர்களுக்கு எதிராக இருந்தன. 10,553 வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் நண்பர்கள், ஆன்லைன் நண்பர்கள், நேரடி பங்காளிகள் அல்லது பாதிக்கப்பட்டவர்களின்  முன்னாள் கணவர்களாக இருந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

statistics about rape

2017 ஆம் ஆண்டில் அதிகபட்சமாக கற்பழிப்பு வழக்குகள் (5,562)  மத்திய பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.  அவற்றில் 97.5 சதவீதம் தெரிந்த நபர்களால் செய்யப்பட்டவை. ராஜஸ்தானில் 3,305 வழக்குகள் உள்ளன.  அவற்றில் 87.9 சதவிகிதம் தெரிந்த நபர்களால் நடத்தப்பட்டவை.

மராட்டிய மாநிலத்தில் நண்பர்கள், கூட்டாளிகள் அல்லது உறவினர்கள் மீது 98.1 சதவீத கற்பழிப்பு வழக்குகள் பதிவாகி உள்லளன. மணிப்பூரில் பதிவு செய்யப்பட்ட 40 கற்பழிப்பு வழக்குகளும் பாதிக்கப்பட்டவருக்குத் தெரிந்த நபர்களுக்கு எதிரானவையாக உள்ளன.

statistics about rape

பாலியல் பலாத்காரங்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தெரிந்தவர்கள் செய்யும் பாலியல் குற்றங்கள் குறித்த குழப்பமான புள்ளிவிவரங்களின் ஒரு பகுதியாக இந்த எண்கள் உள்ளன. 

statistics about rape

2018 ஆம் ஆண்டில், கிளாஸ்கோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஸ்காட்லாந்தில் 991 பெண்கள் பாலியல் வன்கொடுமை மற்றும் கற்பழிப்பை எதிர்கொண்ட வழக்குகளை ஆய்வு செய்தனர். குற்றவாளிகளில் 90 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டவருக்கு காதலன், முன்னாள் கணவர், குடும்பம், முதலாளி, அண்டை அல்லது நண்பர் போன்ற பல்வேறு நிலைகளில்  தெரிந்தவர்களாக இருந்தனர்.

எப்படிப்பார்த்தாலும்  2015  தேசிய குற்ற ஆவண காப்பகம் அறிக்கையானது  95 சதவிகித கற்பழிப்புகளில் குற்றவாளிகள் பழக்கமான நபர்கள் என்று கூறியிருந்தது.

Follow Us:
Download App:
  • android
  • ios