பள்ளிகளில் என்.சி.இ.ஆர்.டி. பாட புத்தகங்கள், ஸ்டேஷனரி பொருட்கள் விற்பனை செய்ய கடந்த ஏப்ரல் மாதம் சி.பி.எஸ்.இ. கல்வி வாரியம் தடை விதித்து இருந்த நிலையில், அந்த தடையை தற்போது விலக்கிக்கொண்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் சி.பி.எஸ்.இ. கல்வி வாரியம் வௌியிட்ட உத்தரவில், “ சி.பி.எஸ்.இ. பள்ளிகள் வர்த்தக நோக்கில் பள்ளிகளில் கடைகளை நடத்தக்கூடாது. மாணவர்களுக்கு சீருடைகள் ஸ்டேஷனரி பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது’’ எனத் தெரிவித்து இருந்தது.

இந்நிலையில், சி.பி.எஸ்.இ. கல்வி வாரியம் நேற்று பிறப்பித்த உத்தரவில், தான் ஏப்ரல் மாதம் பிறப்பித்த உத்தரவை திருத்தி பள்ளிகளில் விற்பனை செய்ய அனுமதி அளித்துள்ளது.

இது குறித்து சி.பி.எஸ்.இ. கல்வி வாரியம் நேற்று தனது இணையதளத்தில் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது-

சி.பி.எஸ்.இ. பள்ளிகள் தங்கள் எல்லைக்குள் உட்பட்ட பகுதியில் என்.சி.இ.ஆர்.டி. பாட  புத்தகங்களை மாணவர்களுக்கு விற்பனை செய்யலாம். மேலும், மாணவர்களுக்கு பயன்படும் பொருட்களை விற்பனை செய்யும் ஸ்டேஷனரிகடைகளையும் திறக்கலாம். ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் மாற்றம் செய்யப்பட்டு இது பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.