எந்த மாநிலத்துக்கும் சிறப்பு அந்தஸ்து கிடையாது: நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்
சிறப்பு அந்தஸ்து கோரும் எந்த மாநிலத்தின் கோரிக்கையையும் மத்திய அரசு பரிசீலிக்காது என்று மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
சிறப்பு அந்தஸ்து கோரும் எந்த மாநிலத்தின் கோரிக்கையையும் மத்திய அரசு பரிசீலிக்காது என்று மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
ஒடிசா மற்றும் பீகார் மாநிலங்கள் கடந்த சில ஆண்டுகளாக சிறப்பு அந்தஸ்து கோரி வரும்நிலையில் நிர்மலா சீதாராமன் பதில் அந்த மாநில அரசுகளுக்கு பெரு அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
மத்திய பட்ஜெட் குறித்து ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் நேற்று நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றிருந்தார். அப்போது, அவர் பேசியதாவது:
எந்த மாநிலத்துக்கும் சிறப்பு அந்தஸ்து இல்லை என 14-வது நிதிஆணையம் தனது அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. ஆதலால், எந்த மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து கோரிக்கையை மத்திய அரசு பரிசீலிக்காது.
ஜார்ஜ் சோரஸ் கருத்தில் உடன்பாடில்லை! மோடி அரசு பலவீனமானதா எனத் தெரியாது! ப.சிதம்பரம் கருத்து
ஆந்திர மாநிலப் பிரிவினையின்போது, ஆந்திரம், தெலங்கானா ஆகியை தொடக்க காலத்தில் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டிருந்தது. ஆனால், நிதி ஆணையமோ இனிமேல் எந்த மாநிலத்துக்கும் சிறப்பு அந்தஸ்து வழங்கக்கூடாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது.
ஒடிசா முதல்வர் கூறுவது மகாத்மாகாந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு நிதி குறைப்பு, நெல்கொள்முதலைக் குறைத்துவிட்டோம் என்றகுற்றச்சாட்டு ஆதரமற்றது. 100 நாட்கள் வேலைத்திட்டத்துக்கு நிதிஒதுக்கீடு குறையவில்லை.
100 நாட்கள் வேலைத்திட்டம் தேவையின் அடிப்படையில் நீட்டிக்கப்படுவதாகும், தேவை அதிகரிக்கும்போது நிதியும் ஒதுக்கப்படும். நெல் கொள்முதல், கோதுமை கொள்முதல் போன்றவற்றை ஒடிசா மாநிலத்தில்இருந்து குறைக்கவில்லை.
குறைந்தபட்ச ஆதாரவிலை அதிகரிக்கப்பட்டு, விவசாயிகளுக்கு அதிகவருமானம் கிடைக்கிறது ” எனத் தெரிவித்தார்
ஜார்ஜ் சோரஸ் ஆபத்தானவர் ! மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
மத்திய அரசின் திட்டங்களுக்கு 90 சதவீத நிதியைப் பெறும் நோக்கில் பீகார், ஒடிசா மாநிலங்கள் சிறப்பு அந்தஸ்து கோரி வந்தன. பேரிடர்களில் அடிக்கடி ஒடிசா மாநிலம் பாதிக்கப்படுவதை சுட்டிக்காட்டி சிறப்பு அந்தஸ்தை முதல்வர் நவீன்பட்நாயக் கோரியிருந்தார்.
நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தில், பிஜூ ஜனதா தளம் எம்பி சஸ்மித் பத்ரா, தனது மாநிலத்துக்கு சிறப்புஅந்தஸ்து வழங்கும் கோரிக்கையை எழுப்பினார். அப்போது அவர் பேசுகையில் “ எப்போதெல்லாம் இந்தியப் பெருங்கடலில் புயல் உருவாகிறதோ அப்போதெல்லாம் ஒடிசா பாதிக்கப்படுகிறது, வீடுகள் சேதமடைகின்றன, பயிர்கள் நாசமாகின்றன.
ஆதலால் இயற்கை பேரிடர்களை கருத்தில் கொண்டு ஒடிசா மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும், மத்திய அரசின் திட்டங்களுக்கு 90 சதவீதம் நிதி வழங்கிட வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.
பீகார் மாநிலத்துக்கும் சிறப்பு அந்தஸ்து வழங்கிட வேண்டும் என முதல்வர் நிதிஷ் குமார் கடந்தஆண்டு நவம்பர் மாதம் கோரிக்கை எழுப்பி இருந்தார். பீகார் மாநிலத்துக்கும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கும் சிறப்பு அந்தஸ்து வழங்க மத்திய அரசு மறுக்கிறது என்று நிதிஷ் குமார் சாடியிருந்தார்.