Chidambaram: ஜார்ஜ் சோரஸ் கருத்தில் உடன்பாடில்லை! மோடி அரசு பலவீனமானதா எனத் தெரியாது! ப.சிதம்பரம் கருத்து
சர்வதேச கோடீஸ்வரர் ஜார்ஜ் சோரஸ் கடந்த காலத்தில் கூறிய பெரும்பாலான கருத்துக்களில் நான் உடன்பாடில்லை, இப்போது அவர் கூறியபெரும்பாலான கருத்துக்களிலும் நான் உடன்படவில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சர்வதேச கோடீஸ்வரர் ஜார்ஜ் சோரஸ் கடந்த காலத்தில் கூறிய பெரும்பாலான கருத்துக்களில் நான் உடன்பாடில்லை, இப்போது அவர் கூறியபெரும்பாலான கருத்துக்களிலும் நான் உடன்படவில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
அதானி குழுமம் பங்குச்சந்தையில் செய்த தில்லுமுல்லு, மோசடிகள் குறித்து அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம் அம்பலப்படுத்தி அறிக்கையாக வெளியிட்டது .
முனிச் நகரில் நடந்த முனிச் பாதுகாப்பு மாநாட்டில் கோடீஸ்வரர், 92வயதான ஜார்ஜ் சோரஸ் பேசுகையில் “ இந்தியா ஜனநாயக நாடு, ஆனால், அந்நாட்டின் தலைவர் மோடி, ஜனநாயகவாதி அல்ல. முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறையைத் தூண்டுவது அவரின் வேகமான எழுச்சிக்கு ஒரு முக்கிய காரணம்.
ஜார்ஜ் சோரஸ் ஆபத்தானவர் ! மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
ஹிண்டன்பர்க் அறிக்கையால் அதானி குழுமப் பங்குகள் சரிந்த விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனமாக இருக்கிறார். பிரதமர் மோடி தொடர்புடைய அதானி குழுமத்துடன் தொடர்பில் இருப்பதால், இந்தியாவில் ஜனநாயகரீதியான மறுமலர்ச்சிக்கான கதவுகளைத் திறந்துவிட்டுள்ளது. மோடியும், அதானியும் நெருங்கிய கூட்டாளிகள். அவர்களின் தலைவிதி பின்னிப்பிணைந்துள்ளது. இந்த விவகாரத்தில் மவுனமாக இருக்கும் மோடி, அந்நிய முதலீட்டாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு நாடாளுமன்றத்தில் பதில் அளிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இதற்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியும் பதிலடி கொடுத்தார். ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்க்க சோரஸ் முயல்கிறார் என்று ஸ்மிருதி இரானி குற்றம்சாட்டினார்.
இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதிஅமைச்சருமான ப.சிதம்பரம், ஜார்ஜ் சோரஸ் குறித்து ட்விட்டரில் கருத்துப் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
ஜார்ஜ் சோரஸ் முன்பு கூறிய கருத்துக்களில் பெரும்பாலானவற்றில் நான் உடன்பட்டதில்லை. இப்போது அவர்கூறிய கருத்துக்களில் பெரும்பாலானவற்றில் எனக்கு உடன்பாடு இல்லை.ஆனால், ஜார்ஜ் சோரஸின் கருத்துக்கள், ஜனநாயக ரீதியாக இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்க்கும் முயற்சி என்று மத்திய அரசு கூறியிருப்பது சிறுபிள்ளைத்தனமான அறிக்கை.
யார் ஆட்சியாள வேண்டும், யார் ஆட்சியைவிட்டு செல்ல வேண்டும் என்பதை இந்தியாவில் உள்ள மக்கள்தான் முடிவு செய்வார்கள். 92வயது கோடீஸ்வர வெளிநாட்டு பிரஜை பேசும் வெற்று பேச்சால், கவிழ்ந்துவிடும் அளவுக்கு மத்தியில் மோடி அரசு பலவீனமாக இருக்கிறது என எனக்குத் தெரியாது.
ஜார்ஜ் சோரஸ் பேச்சு இந்திய ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்: ஸ்மிருதி இரானி கொந்தளிப்பு
ஜார்ஜ் சோரஸ் கருத்தைக் புறக்கணித்துவிட்டு, நூரில் ரூபினி கருத்துக் கவனியுங்கள். பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களால் இந்தியா வழிநடத்தப்படுவது அதிகரிக்கிறது. சந்தையில் போட்டியைக் குறைத்து, புதிய நிறுவனங்கள் நுழைவதைத் தடுத்துவிடும். தடையில்லா வர்த்தகம் என்பது, திறந்த, போட்டியான பொருளாதாரம்தான். ஆனால், மோடி அரசின் கொள்கைகள், குறிப்பிட்ட சிலநிறுவனங்களை(ஆலிகாபோலி) மட்டுமே வளர்க்கிறது.
இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
நியூயார்க்கைச் சேர்ந்த பொருளாதார ஆலோசனை நிறுவனம் ரூபினி மேக்ரோ அசோசியேட்ஸ். இதன் தலைமை நிர்வாக அதிகாரி நூரில் ரூபினி. அட்லஸ் கேபிடல் டீமின் தலைமை பொருளாதார நிபுணர்களில் ரூபினியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.