இந்தியாவில் கொரோனா பாதிப்பு தினமும் அதிகரித்துவருகிறது. பாதிப்பு எண்ணிக்கை தேசியளவில் இன்னும் கட்டுக்குள் வரவில்லை. இந்தியாவில் 31787 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை 1000ஐ கடந்துவிட்டது. இதுவரை 1008 பேர் இந்தியாவில் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். 7797 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 9318 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் பாதிப்பு கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கிறது. தேசிய அளவில் மகாராஷ்டிரா தான் பெரும் அச்சுறுத்தலாக விளங்குகிறது. அதற்கடுத்தபடியாக குஜராத்தில் 3774 பேரும் 3314 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் பாதிப்பு தீவிரமாக உள்ளது.

மாநில வாரியாக பாதிப்பு விவரத்தை பார்ப்போம்.

மகாராஷ்டிரா - 9318

டெல்லி - 3314

குஜராத் - 3774

மத்திய பிரதேசம் - 2387

ராஜஸ்தான் - 2393

உத்தர பிரதேசம் - 2053

தமிழ்நாடு - 2162

ஆந்திரா - 1332

தெலுங்கானா - 1004

மேற்கு வங்கம் - 725

கர்நாடகா - 532

கேரளா - 485

ஜம்மு காஷ்மீர் - 565

பஞ்சாப் - 352

ஹரியானா - 310

அந்தமான் நிகோபார் - 33

அருணாச்சல பிரதேசம் - 1

அசாம் - 38

பீகார் - 378

சண்டிகர் - 56 

சத்தீஸ்கர் - 38

ஹிமாச்சல பிரதேசம் - 41

ஜார்கண்ட் - 106

மேகாலயா - 12

உத்தரகண்ட் - 54

ஒடிசா - 122

லடாக் - 22.