இந்தியாவில் கொரோனா பாதிப்பு 12 ஆயிரத்தை கடந்து 13 ஆயிரத்தை நெருங்குகிறது. மகாராஷ்டிராவில் பாதிப்பு எண்ணிக்கை 3000ஐ கடந்துவிட்ட நிலையில், மாநில வாரியாக கொரோனா பாதிப்பு விவரத்தை பார்ப்போம்.
இந்தியாவில் கொரோனாவை தடுக்க, மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு, தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12,456உள்ளது. கொரோனா பலி எண்ணிக்கை 423ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவை பொறுத்தமட்டில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 3801 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிவேகமாக சென்றுகொண்டிருந்த கொரோனா பாதிப்பு, தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களாக வெகுவாக குறைந்துள்ளது. நேற்று முன் தினம் வெறும் 31 பேருக்கும் நேற்று வெறும் 38 பேருக்கும் கொரோனா உறுதியாகியிருந்த நிலையில் இன்று வெறும் 25 பேருக்கு மட்டுமே கொரோனா பாசிட்டிவ் உறுதியாகியுள்ளது. எனவே பாதிப்பு எண்ணிக்கை 1267ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் பரிசோதனை எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டும் கூட, பாதிப்பு எண்ணிக்கை கடந்த 3 நாட்களில் வெகுவாக குறைந்துள்ளது.

டெல்லியில் 1578பேரும் ராஜஸ்தானில் 1123 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாநில வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்:
மகாராஷ்டிரா - 3081
டெல்லி - 1578
ராஜஸ்தான் - 1123
தமிழ்நாடு - 1267
மத்திய பிரதேசம் - 987
உத்தர பிரதேசம் - 735
குஜராத் - 871
தெலுங்கானா - 647
ஆந்திரா - 525
கேரளா - 388
ஜம்மு காஷ்மீர் - 300
கர்நாடகா - 279
மேற்கு வங்கம் - 231
ஹரியானா - 205
பஞ்சாப் - 186
பீஹார் - 72
ஒடிசா - 60
உத்தரகண்ட் - 37
சத்தீஸ்கர், ஹிமாச்சல பிரதேசம் - 33
அசாம் - 32
ஜார்கண்ட் - 28
சண்டிகர் - 21
லடாக் - 17
அந்தமான் நிகோபார் - 11
புதுச்சேரி, கோவா - 7
மணிப்பூர், திரிபுரா - 2.
Add Asianetnews Tamil as a Preferred Source

