கொரோனாவால் உலகளவில் 17 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1 லட்சத்து 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். இந்தியாவில் இதுவரை 7600 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 249 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. அதிலும் குறிப்பாக கடந்த 10 நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை தாறுமாறாக அதிகரித்துள்ளது. ஆனாலும் கொரோனா இந்தியாவில் இன்னும் சமூக தொற்றாக பரவவில்லை. சமூக தொற்றாக பரவாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. கொரோனா தீவிரமடைந்துவருவதால் ஏப்ரல் 14ம் தேதிக்கு பிறகும், 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது..

இந்தியாவை பொறுத்தமட்டில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, ராஜஸ்தான், தெலுங்கானா, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்கள் தான் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் இந்த மாநிலங்களில் தான் தினந்தோறும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சங்களை எட்டிவருகிறது. ஆரம்பத்தில் மின்னல் வேகத்தில் சென்றுகொண்டிருந்த கேரளாவில் கொரோனா பாதிப்பு கடந்த ஒரு வாரமாக பெரியளவில்லை. 

இந்தியாவில் மொத்தம் 7600 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 1666 பேர் மகாராஷ்டிராவையும் 911 பேர் தமிழ்நாட்டையும் சேர்ந்தவர்கள். ஆரம்பத்தில் அதிவேகமாக உயர்ந்த கொரோனா பாதிப்பு, கேரளாவில் கடந்த சில தினங்களாக கட்டுக்குள் வந்துள்ளது.

மாநில வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்:

மகாராஷ்டிரா - 1666

தமிழ்நாடு - 911

டெல்லி - 903

ராஜஸ்தான் - 579

உத்தர பிரதேசம் - 431

தெலுங்கானா - 471

மத்திய பிரதேசம் - 426

கேரளா - 357

ஜம்மு காஷ்மீர் - 207

லடாக்  - 15

கர்நாடகா - 214

ஹரியானா - 169

குஜராத் - 432

ஆந்திரா - 386

பஞ்சாப் - 151

மேற்கு வங்கம் - 128

உத்தரகண்ட் - 35

ஹிமாச்சல பிரதேசம் - 28

சத்தீஸ்கர் - 19

சண்டிகர் - 18

பீகார் - 60

புதுச்சேரி - 6

கோவா- 7 

அந்தமான் நிகோபார் - 11

அசாம் - 29

ஜார்கண்ட் - 17.