Asianet News TamilAsianet News Tamil

ஸ்டார்ட் அப்கள் தேசத்தின் சொத்து.. தொழில்நுட்ப உச்சி மாநாடு - கலந்துகொண்டு பேசிய அமிதாப் கான்ட் பெருமிதம்!

Global Technology Summit : டெல்லியில் நடைபெறும் உலகளாவிய தொழில்நுட்ப உச்சிமாநாட்டில் பங்கேற்று பேசியுள்ளார் NITI ஆயோக்கின் இரண்டாவது தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் கான்ட்

Start Ups are Treasure of our nation says Amitabh Kant in global technology summit 2023 ans
Author
First Published Dec 5, 2023, 2:29 PM IST

டெல்லியில் இன்று உலகளாவிய தொழில்நுட்ப உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது, பல்வேறு துறையை சேர்ந்த தலைவர்களும் இந்த உச்சியில் மாநாட்டில் தங்களுடைய கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். நேற்று டிசம்பர் 4 ஆம் தேதி துவங்கிய இந்த முக்கியமான மாநாடு, நாளை டிசம்பர் 6ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 

Carnegie India என்ற பிரபல நிறுவனம் இந்த உச்சி மாநாட்டை தொகுத்து வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தொழில்நுட்பம் மற்றும் மைக்ரோ பயாலஜி சம்பந்தமான பல உயர்மட்ட கருத்துக்கள் இந்த உச்சி மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது. இந்நிலையில் இந்த முக்கியமான நிகழ்வில் பங்கேற்று பேசியுள்ளார் NITI ஆயோக்கின் இரண்டாவது தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் கான்ட்.

தொழில்நுட்பம் அனைத்தையும் மெருகேற்றும்.. உலகளாவிய தொழில்நுட்ப உச்சி மாநாடு 2023 - பங்கேற்ற அமைச்சர் ராஜ்நாத்! 

இந்தியாவின் தற்போது பல Start-Up நிறுவனங்கள் உருவாகி வருவதாகவும், அவை தான் நமது தேசத்தின் சொத்துக்கள் என்றும் கூறியுள்ளார். தொழில்நுட்பம் என்ற விஷயத்தில் இந்தியா வியத்தகு பல உயரங்களை தொடர்ச்சியாக தொட்டு வருகிறது என்றும் அவர் கூறினார். இந்தியாவின் ஜி 20 பதவிக்காலம் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் ஒரு புதிய கட்டமைப்பை கொடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

புதுடெல்லியில் பிறந்த அமிதாப் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆவார். அமிதாப் அவர்கள் கேரளத்தில் சுற்றுலா துறையிலும், தொழில்துறைகளும் பணிபுரிந்தவர் ஆவார். இவர் கோழிக்கோடு மாவட்ட ஆட்சித் தலைவராகவும் இருந்துள்ளார். கோழிக்கோடு வானூர்தி நிலையம் நிர்வாகம் உள்ளிட்ட பல உயர்மட்ட பதவிகளை வகித்தவர் அவர். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios