ஆந்திர மாநில தேர்தலில் ஜெகன் மோகன் ஆட்சியை வீழ்த்து சந்திரபாபு நாயுடு ஆட்சியை கைப்பற்றியுள்ளார். இந்தநிலையில் தங்கள் தலைமை ஆந்திர பிரதேசத்திற்கு செழிப்பையும் முன்னேற்றத்தையும் கொண்டு வரட்டும் என தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  

சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை

நாடாளுமன்ற தேர்தல் கடந்த இரண்டு மாதங்களாக நாடு முழுவதும் நடைபெற்று முடிவடைந்துள்ளது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. இதில் நாடாளுமன்ற தேர்தலோடு, சிக்கிம், அருணாச்சல பிரதேசம், ஒடிசா, ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில் நேற்று முன்தினம் சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேச சட்டப்பேரவைக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவடைந்தது. 

இதனையடுத்து இன்று ஆந்திரா தொகுதிக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தமுள்ள 175 சட்டப்பேரவை தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்டி 130க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றியது. கூட்டணி கட்சியான ஜனசேனா 20 தொகுதிகளிலும், பாஜக 7 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. அதேநேரம், ஆளும் கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி 18 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. 

Scroll to load tweet…

வாழ்த்து தெரிவித்த ஸ்டாலின்

இந்தநிலையில் ஆந்திரா மாநிலத்தை கைப்பற்றிய சந்திரபாபு நாயுடுவுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ஆந்திர மாநில சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ள அவர், தங்கள் தலைமை ஆந்திர பிரதேசத்திற்கு செழிப்பையும் முன்னேற்றத்தையும் கொண்டு வரட்டும், அதன் மக்களின் நம்பிக்கைகளையும் கனவுகளையும் நிறைவேற்றட்டும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இதே போல பிரதமர் மோடியும் சந்திர பாபு நாயுடுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் வருகிற 9ஆம் தேதி சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக பதவியேற்கவுள்ளதாகவும் இந்த பதிவியேற்பு விழாவில் மோடி கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.