srilanka president supported to sirilankan tamilans

இலங்கையில் நடத்தப்பட்ட இனப்படுகொலையில், தமிழர்களை கொன்று குவித்த ராணுவ வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார். 

இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு நடந்த இறுதிக்கட்ட போரில், ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான தமிழர்களை இலங்கை இராணுவம் கொன்று குவித்தது. 

இலங்கை இறுதிக்கட்ட போரின் போது இல்கை ராணுவத்தினரால் 40,000 க்கும் மேற்பட்டோர் கொன்று குவிக்கப்பட்டதாக ஐ.நா., புள்ளிவிபரம் தெரிவித்துள்ளது. 

இதுவரை இலங்கை ராணுவத்திற்கு ஆதரவாக பேசி வந்த இலங்கை அதிபர் சிறிசேனா, முதல் முறையாக இலங்கை ராணுவத்திற்கு எதிராக பேசியுள்ளார். 

இதுகுறித்து பேசிய சிறிசேனா, அப்போதைய ஆட்சியாளர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக சில ராணுவ வீரர்கள் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாகவும் அதை மனசாட்சியுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார். 

தன் மீதுள்ள கறையை ராணுவம் அகற்ற வேண்டிய நேரம் இது எனவும் ராணுவத்தின் கட்டுப்பாட்டை மீறி சில அத்துமீறிய விஷயங்கள் நடந்துள்ளன எனவும் குறிப்பிட்டார். 

போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணை நடைபெற்றுவருவதாகவும் போர்க்குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் நிரபராதிகள் என தெரியவந்தால் அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் எனவும் இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா உறுதியளித்துள்ளார்.