ரஜினிகாந்துக்காக உண்ணாவிரதம் இருந்த ஸ்ரீ தேவி

நடிகை ஸ்ரீதேவியின் உடல், இன்று இரவு சென்னைக்கு கொண்டுவரப்படுகிறது.

தமிழகத்தில் பிறந்து சினி  உலகில் ஒரு கலக்கல் ராணியாக வலம் வந்தவர் தான் ஸ்ரீ தேவி...

ரஜினியுடன் நடித்த ஸ்ரீதேவி

தமிழ் திரை உலகில் ரஜினி மற்றும் கமலுடன் பல படங்களில் இணைந்து நடித்து வந்தவர் தான் ஸ்ரீ தேவி...

அதிலும் குறிப்பாக ரஜினியுடன், ஜானி, ப்ரியா, அடுத்த வாரிசு,16 வயதினிலே உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்தனர். 

கே.பாலச்சந்தர் இயக்கத்தில்  ரஜினி மற்றும் ஸ்ரீ தேவி வெளியான மூன்று  முடிச்சு  படத்திலிருந்து இருவரும் நட்புடன் இருந்து வந்தனர்

இந்நிலையில்,ஸ்ரீ தேவி இறப்பை தொடர்ந்து,ஒரு சுவாரஸ்ய தகவல் வெளியாகி உள்ளது

2011 ஆம்  ஆண்டு உடல் நலம் பாதித்த ரஜினி

கோச்சடையான் படப்பிடிப்பு நடக்கும் சூழலில் ரஜினி கணத்துக்கு தீவிர உடல் நல குறைவு ஏற்பட்டு,சிரமத்திற்கு ஆளானார்.அப்போது, அமெரிக்கா சென்று  சிகிச்சை பெற்று  நலமுடன் திரும்பி வந்தார் ரஜினி..

அந்த சமயத்தில் நடிகர் ரஜினிகாந்த நலம் பெற வேண்டும் என்பதற்காக,புனேவில்  உள்ள சாய்பாபா கோவிலில் வேண்டி பிரார்த்தனை செய்து வந்துள்ளார்

இந்த நிகழ்வை ரஜினி  மற்றும் ஸ்ரீ தேவி பற்றிய மலரும் நினைவுகளில்,தற்போது  ரசிகர்கள் சமூக வலைதளங்களில பதிவிட்டு  வருகின்றனர்.